சுப்பர் ஓவரால் இங்கிலாந்து சூரசம்ஹாரம் ஆடிய நாள்

2020-07-14 

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்ந்தி ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை முத்தமிட்ட நாள் இன்று ஆகும்.

இதனால் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்று சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை வென்ற மூன்றாவது அணியாக இங்கிலாந்து பதிவானது.

2019 ஜூலை 14 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தின் வெற்றியை தட்டிப் பறித்தது இங்கிலாந்து.


Advertisement