ஈராக், குவைத் மீது படையெடுத்து 30 ஆண்டுகள்.


1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி முதல் 4ம் தினதி வரை, அதாவது இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் குவைத் மீது படையெடுப்பை அப்போதைய ஈராக்கியத் தலைவர் சத்தாம் ஹீசைன் நடத்தினார்.

குவைத் மீதான படையெடுப்பு அல்லது ஈராக்-குவைத் போர் என்பது ஈராக்கிற்கும் குவைத்திற்கும் இடையே இடம்பெற்ற பெரும் முரண்பாடாகும். இது ஏழு மாதங்கள் ஈராக் குவைத்தை ஆக்கிரமிக்க வழிகோலியது. பின்னர், இதுவே அமெரிக்கா தலைமையிலான படைகள் வளைகுடாப் போரை நடாத்த காரணமாகியது.