கொரோனா வைரஸ் தொற்றுக்கு உத்தர பிரதேச அமைச்சர் கமலா ராணி பலி


கொரோனா வைரஸ் தொற்றால் உத்தர பிரதேச தொழில்துறை கல்வி அமைச்சர் கமலா ராணி உயிரிழந்துள்ளார்.

62 வயதான இவருக்கு கடந்த ஜுலை 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.


இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் உயிரிழந்தார் என்கிறது உத்தர பிரதேச அரசின் அறிக்கை.


கமலா ராணியின் இறப்புக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்


 

அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் மக்களுக்காக உழைத்தவர், மக்களால் மதிக்கப்பட்டவர்," என குறிப்பிட்டுள்ளார்.


கமலா ராணியின் இறப்புக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உத்தரபிரதேச அரசில் எனது சக அமைச்சர் கமலா ராணி அவர்களின் மரணம் குறித்த தகவல்கள் கவலை அளிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.


ராமர் கோயில் விழாவுக்கான தனது அயோத்தி பயணத்தையும் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார்.


சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.