ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்

 

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு நாளை (11) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த பிரதேச சபையில் தவிசாளராக பதவி புரிந்த ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை கடந்த ஜூலை மாதம் 20 ம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐ.ரீ.அஸ்மி, அதே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எம்.நௌபர் என்பவருக்கு இரண்டு வருடங்களில் பின்னர் தவிசாளர் பதவியை விட்டுக் கொடுப்பதாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.
அதற்கமைய பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு நாளை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Advertisement