பதவி துறக்கத் தயாராகும் #ரணில்


 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் இந்த தகவலை வெளியிட்டார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக, நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதன்படி, ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் அகில விராஜ்காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்தது.


தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.


இலங்கை தேர்தல்: இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகள் தீருமா?

இலங்கை தேர்தல்: வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்

மேலும், நாடாளுமன்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. தேசிய பட்டியலின் ஊடாக ஒருவர் மட்டுமே தேர்வாகியிருந்தார்.


இலங்கை: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க - என்ன காரணம்?பட மூலாதாரம்,GETTY IMAGES

ரணில் விக்ரமசிங்கவின் உள்கட்சி அதிருப்தியாளர்கள் ஆக இருந்தவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் வேறொரு கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஒரு குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.


இவ்வாறு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, இந்த முறைத் தேர்தலின் ஊடாக 54 ஆசனங்கள் கிடைத்துள்ளன.


இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக இன்று தீர்மானித்துள்ளார்.ட்டியலை காட்டு


தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் நாட்டின் தற்போதைய மொத்த எண்ணிக்கையில் தெரியாமல் இருக்கலாம்


**புதிய தொற்றுகளுக்கான முந்தைய தரவுகள் 3 நாட்களின் சராசரி. எண்ணிக்கை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால், தற்போதைய தேதிக்கான சராசரியை கணக்கிட இயலவில்லை.


ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்


கடைசியாக பதிவேற்றியது : 9 ஆகஸ்ட், 2020, பிற்பகல் 3:56 IST


ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர், அதாவது 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது.


சுதந்திரமடைந்ததன் பின்னர், இலங்கையின் முதல் முதலாக ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியை கைப்பற்றியது.


இதன்படி, 1947 முதல் 1956, 1965 முதல் 1970, 1977 முதல் 1994, 2001 முதல் 2004 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியை கைப்பற்றியிருந்தது.


மேலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றப்பட்டது.


இலங்கையில் தற்போதுள்ள அரசியலமைப்பு கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே அமைக்கப்பட்டிருந்தது.


இவ்வாறான வரலாற்று பின்புலத்தை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, இன்று இலங்கை அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ளது.


இந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க அந்த கட்சியின் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.


ரணில் விக்ரசிங்க

ரணில் விக்ரமசிங்க பியகம தொகுதியிலிருந்து 1977ஆம் ஆண்டு முதன் முறையாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த காமினி திஸாநாயக்க 1994ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.


1993 முதல் 1994, 2001 முதல் 2004 மற்றும் 2015 முதல் 2019 வரையான காலம் வரை ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக பதவி வகித்திருந்தார்.


அத்துடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கட்சித் தலைவராகவும் அவர் பதவியேற்றிருந்தார்.


இவ்வாறான நிலைலையில், 26 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தற்போது மாற்றம் ஏற்படவுள்ளது.