தற்காலிக தடை


 Lல்ஜித் அலுவிஹாரேவுக்கு மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


மத்திய மாகாண ஆளுநரால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


டல்ஜித் அலுவிஹாரேவின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்றை நியமித்து, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

3 மாதங்களுக்குள் குறித்த விசாரணை அறிக்கையை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரம் ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவுக்கு உள்ளது.


டல்ஜித் அலுவிஹாரேவின் கடமைகளை முன்னெடுப்பதற்கும் மேயரின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் பிரதி நகர மேயர் சந்தனம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்Advertisement