தலவாக்கலை மற்றும் கொட்டகலை பகுதிகளில் பீ.சீ.ஆர் பரிசோதனை


 (க.கிஷாந்தன்)

 

தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (31.10.2020) பெறப்பட்டன.

 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் தலவாக்கலை – தெவிசிறிபுர, கொட்டகலை, வூட்டன் மற்றும் ரொசிட்டா, டிரேட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

 

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 

எனவே, பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.