சிவகுமார் வீட்ல விசேஷம்

 


நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது.


நடிகர் சிவகுமார் வீட்டில் விசேஷம். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான கார்த்தி மீண்டும் அப்பாவாகப்போகிறார்.


சிவகுமாரின் மகனும், சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி 'பருத்திவீரன்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர். 'ஆயிரத்தில் ஒருவன்', 'மெட்ராஸ்', 'கைதி' எனப் பல முக்கியமானப் படங்களில் நடித்திருக்கும் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறார்.


நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது. ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள். மகளின் பெயர் உமையாள்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு லாக்டெளனின் தொடக்கத்தில் மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் கார்த்தியின் மனைவி ரஞ்சனி. முதல் மூன்று மாதங்கள் சென்னையிலேயே இருந்தவர்கள் ஜூன் மாதவாக்கில் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டார்கள். நடிகர் கார்த்தியும் மனைவியோடு கிராமத்தில்தான் இருக்கிறார். விரைவில் இவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் குழந்தைப் பிறக்க இருக்கிறது.
Advertisement