வாட்ஸ் ஆப்பில் 7 நாட்களில் மெசேஜுகள் தானாக அழிந்துவிடும்


 


மெசேஜுகளை காணாமல் போகச் செய்வது" (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்சப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து, அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலிலுமே மெசேஜுகள் தானாக அழிந்துவிடும்.

இது சேட்டுகளை தனிப்பட்ட முறையில் பாதுகாக்க உதவும் என பேஸ்புக்கின் வாட்சப் செயலி தெரிவிக்கிறது.

எனினும், மெசேஜுகளை பெறுபவர் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தோ அல்லது தங்களுக்கு வேண்டிய செய்திகள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு ஃபார்வாரட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

"நீங்கள் செய்த சேட்கள் நிரந்தரமாக உங்கள் போனில் இருக்காதது மனநிம்மதியை தரும். நீங்கள் அழிக்க மறந்த மெசேஜுகள் இதனால் ஏழ நாட்களுக்கு பிறகு தானாக அழிந்துவிடும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.