கறுப்பு ஆடையில்,வெளுத்து வாங்கிய கமல்

ல்ல நாட்கள், விஷேச தினங்களில் கருப்பு உடைகள் அணியக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். முக்கியமாக பிறந்தநாளில் அணியும் உடை மங்கலகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் பிறந்தநாளான இன்றைய தினம் கருப்பு உடையில் வந்து ரசிகர்களை சந்தித்தார். அதே நேரத்தில் கமலுக்கு கண் பட்டு விடக்கூடாது என்று பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தனர் அவரது ரசிகர்கள். கமல்ஹாசனை வரவேற்கும் வகையில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்றைய தினம் தனது 66வது பிறந்தநாளினை கொண்டாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்ற கமல்ஹாசனுடன் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

நடிகர் கமல்ஹாசனை காண கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தன்னை காண காத்திருந்த தொண்டர்களுக்காக காரின் மேல் பகுதியில் நின்று கையசைத்தார். கமல்.