கொள்ளையிட்ட நபரை அடையாளம் காண உதவுங்கள்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அத்துமீறி வீடொன்றில் வெளிநாட்டு பணம் மற்றும்  நகை ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை சம்மாந்துறை பொலிஸார் கோரியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள காரைதீவு-6 குறிச்சி  பகுதியில் 2020.10.18 ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் திறந்த வீடொன்றில் அத்துமீறி உட்சென்று வெளிநாட்டு பணம் மற்றும் நகை ஆபரணங்களை கொள்ளையிட்ட நபரை தற்போது சிசிடிவி காணோளி உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0774811827 அல்லது 0719219055 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

மேலும் குறித்த வீட்டில் இருந்து ஸ்ரேலிங் பவுண் மற்றும் பிளாட்டினம் தயாரிப்பில் உருவான ஆபரணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் சந்தேக நபரினால் களவாடப்பட்டுள்ளன.

இச்சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்குவோர் குறித்து இரகசியம் பேணப்படுவதுடன் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சம்மாந்துறை பொலிஸ் கேட்டுள்ளது.Advertisement