நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் முன்றலில்


 (


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம் மௌலவி ஏ.எச்.எச்.எம் நௌபரின்   ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் முன்றலில்   வெள்ளிக்கிழமை(25) மதியம்  இடம்பெற்றது.

கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய இடம்பெற்ற இப்போராட்டத்தில்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை  மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் உட்பட   பொதுமக்கள்  இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 'கபன் சீலை போராட்ட கோரிக்கையில்   ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது   கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  ஜனநாயகம் மத சுதந்திரம் இலங்கையில், நான் முஸ்லீமாய் மரணிக்க விரும்புகின்றேன் ,உள்ளிட்ட மும்மொழிகளில் சுலோகங்கள் ஏந்தி   ஜனாஸா எரிப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மேலும்  நாடு முழுவதிலும் 'கபன் சீலை போராட்டம்' எனும் மௌனவழி போராட்டம் இனம், மதம், பிரதேசம் கடந்து இலங்கையர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன்  வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் 'கபன் சீலை போராட்டம்' எனும்  அன்றாடம் போராட்டமாக  முன்னெடுக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.