மருத்துவமனையில் ரஜினிகாந்த்


 ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அண்ணாத்த என்ற பெயரில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இந்தப் பட சூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த்