பிரார்த்தனை வழிபாடுகளும் வி.சுகிர்தகுமார் 0777113659 


  அம்பாரை மாவட்டத்தில் தொடரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய  பிரார்த்தனை வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று கருங்கொடியூர் ஸ்ரீ சித்திவிநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று(29) காலை முதல் ஆரம்பாகி நடைபெற்றன.
  கடந்த சில நாட்களாக அம்பாரை மாவட்;டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் பல்வேறு சிக்கல்களையும் எதிர்நோக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆலயங்கள் தோறும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுவருவதுடன் மார்கழி மாதத்தில் ஆலயத்தில் பாடப்படும் திருவாசகமுற்றோதலும் நடைபெற்று வருகின்றது.
அக்கரைப்பற்று கருங்கொடியூர் ஸ்ரீ சித்திவிநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் ஆ.சசீந்திரன் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளிலும்; திருவாசகமுற்றோதலிலும் ஓதுவார்கள் பலர் கலந்து கொண்டு 51 பதிகங்களை கொண்ட சிவபுராணம் 19பாடல் உள்ளடங்கலாக திருவாசகத்தில் உள்ள 669 பாடல்களையும்; பாடினர்.
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனும் பக்தி சிறப்பும் 'திருவாசகம் ஒருகால்  ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்' என சிறப்பிக்கப்பட்டதுமான மாணிக்கவாசக சுவாமிகளினால் அருளப்பட்ட திருவாசகத்தேன் ஆலயங்களில்; ஓதல் சிறப்பானதாகும்.
அந்தவகையில் நடராஜப்பெருமானின் துணை கொண்டு நாட்டின் சாந்தி சமாதானம் சகவாழ்வு வேண்டியும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி பிரார்த்திக்கும்  திருவாசகமுற்றோதல் நிகழ்வில் பக்தர்களும் கலந்து கொண்டனர்.