காத்தான்குடியில் 10 பிரிவுகளில் 07 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு..!


 

(#Faslin)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று (31)  முதல் விடுவிக்கப்படுவதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.


கடந்த மாதம் 30ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்தது. 

கடந்த 22 ஆம் திகதி 8 கிராம சேவகர் பிரிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.


தொடர்ந்து 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த நிலையில் 167, 167E, 167C ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தவிர ஏனைய 07 பிரிவுகளிலும் இன்று முதல் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்படுகிறது.


தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டதால் இன்று வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்படிருந்தன. வாகன போக்குவரத்துகளும் இஃடம்பெறுகின்றன.


விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் பொதுச் சந்தைகள் பாடசாலைகள் மத்ரசாக்கள் பள்ளிவாசல்கள் பாலர் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருக்குமெனவும் சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.