7 விக்கெட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்திய பங்களாதேஷ் அணி!

 


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 33 தசம் 2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

இதனடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி 2 இற்கு பூச்சியம் எனும் அடிப்படையில் கைப்பற்றி உள்ளது.

இதேவேளை 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்களாதேஷுக்குப் பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement