டெங்கு நோய் பற்றியும் விழிப்பாக இருப்போம்!



#RisviAAL. 
காத்தான்குடியில் தற்போது டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் எமதூர் மக்களே.

முடக்கம் காரணமாக பொருளாத ரீதியாகவும் உளரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எமதூர் மக்கள் தங்களது பிள்ளைகளையும் உறவினர்களையும் டெங்கு நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு படுகின்ற இன்னல்கள் துன்பங்கள் பல. தற்போது இந்நோயினால் நமதூரில் சில இறப்புக்களும் பதிவாகியுள்ளன.



சிலர் PCR/RATற்கு பயந்து வைத்தியசாலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே பராமரிப்பதற்கு முனைகின்றார்கள். இது பெரும் ஆபத்தான நிலைமையாகும். டெங்கு போன்ற உயிர்கொல்லி நோய்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லாமல் வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. எனவே தாமதிக்காமல் காய்ச்சல் அல்லது வயிற்று வலியுடன் கூடிய காய்ச்சல் போன்றன காணப்படின் வைத்தியசாலைக்கு விரையுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிராபத்தை ஏற்படுத்தவல்லது. 

PCR/RAT மூலம் நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டாலும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு விசேட தனிமைப்படுத்தல் பிரிவுகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்றன. ஆகவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்தியர் ஒருவரின் ஆலோசனையை பெற்று அதன்படி செயற்படுங்கள்.