திருகோணமலை சீமெந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து

 


திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றி வந்த MV EUROSON கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

குறித்த பகுதிக்கு கடற்படையின் 2 படகுகள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறுகின்றது.

 

அபுதாபியிலிருந்து திருகோணமலை வந்த கப்பலொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

திருகோணமலை − இராவணா கோட்டை பகுதியில் பாறைத் தட்டியுள்ளது.

 

இதன்போது, கப்பலில் 18 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுAdvertisement