ஆசிரியர்களாக பாடசாலைக்கு உள்ளீர்ப்பு

 


பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர்களாக பாடசாலைக்கு இணைப்பு செய்தல்.

நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 31 பட்டதாரி பயிலுனர்களை பாடசாலையில் இணைப்பு செய்வதற்கான நியமனம் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) அக்/அல்-பஹ்ரியா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டதாரி ஆசிரியர் பயிலுனர்களுக்கான இணைப்பு கடிதங்கள் வழங்குவதற்காக அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், நிர்வாகம் உத்தியோகத்தர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு கடிதங்களை வழங்கிவைத்தனர்.


Advertisement