பிறப்பு அத்தாட்சிப்பத்திரமற்ற மக்கள் உடன் தொடர்பு கொள்ளவும்!


 வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பிறப்பு அத்தாட்சிப்பத்திரமற்ற மக்கள் உடன் பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப் கேட்டுக்கொண்டார்.

 பிறப்புப் பதிவு அத்தாட்சிப்பத்திரம் இல்லாத சகல இலங்கைப் பிரஜைகளுக்கும் அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதியின் சிந்தனைக்கமைவாக தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரது அறிவுத்தலின் பிரகாரம் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் இதுவரையில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாத அல்லது இதுவரையில் தமது பிறப்பைப் பதிவு செய்திராத பிரஜைகள் சகலரும் தங்களது கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களை உடனடியாக அணுகி விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
 இயலுமானவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவுக்கு வருகைதந்து குறித்த விபரங்களை நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
மேலதிக விபரங்கள் தேவைப்படின், 067 2277436 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Advertisement