யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சட்ட மா அதிபர்.


 சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேரா யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வரவேற்றார்.
வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சட்ட மா அதிபர் இன்று காலை மன்னாருக்கு வருகை தந்துள்ளார்.

இதன்படி, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தைத் அவர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.

இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் அவர் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.