நிலையான நீதி எமது மக்களுக்கு கிடைக்கும் !

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


நிலையான நீதி எமது மக்களுக்கு கிடைக்கும் என்ற வகையில் சுழற்சி முறையிலான போராட்டத்தை இன்று(19) மாலையுடன் முடிவுறுத்துவதாக   சுழற்சி முறை போராட்டத்தில் இணைந்துள்ளவர்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடர்ச்சியாக  இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில்  இடம்பெற்று வருகின்ற  உணவு தவிர்ப்பு போராட்டம் 15 ஆவது நாளாகவும் தொடர்ந்து முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இப்போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் 13 ஆவது நாளான இன்று(19)    முன்னாள்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜகதீசன்   நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் பொத்துவில் பொலிகண்டி பேரணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தாமோதரம் பிரதீபன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட அனைவரும் இதுவரை 15 நாட்களாக குறித்த சுழற்சி முறையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களில் எமது மக்களுக்கு நிலையான நீதி கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டனர்.