தேருநர் இடாப்பு மீளாய்வின் போது,பாதிப்புற்றவருக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை



தகவல்  சட்டத்தரணி சப்ராஸ்

2020ம் ஆண்டுக்குரிய தேருநர் இடாப்பு மீளாய்வின் போது ரிதிதென்னை கிராமத்துக்குரிய கிராம சேவை உத்தியோகத்தர் ZM.றிகாஸ் இஸ்மாயில்  இல 127, ரிதிதென்னை, புணாணை என்ற விலாசத்தில் வசிக்கும் MC.ஹயாத்து முஹம்மது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் நீக்ககப்பட்டிருந்தன.

எவ்விதமான  நியாயமான காரணமின்றி  தேருநர் இடாப்பிலிருந்து பெயர்களை நீக்கியிருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமை  ஆணைக்குழுவில்  கடந்த 05 10 2020 ம் திகதியன்று பாதிக்கப்பட்ட  MC.ஹயாத்து முஹம்மது தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்து  இருந்தார்.


மேற்படி முறைப்பாட்டுக்கு அமைவாக கடந்த 26 03 2021ம் திகதியன்று மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவானது அடிப்படை தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக முறைப்பாடு செய்த MC.ஹயாத்து முஹம்மது அவர்களையும் மற்றும் ரிதிதென்னை பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ZM.றிகாஸ் இஸ்மாயில் அவர்களையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 


விசாரணையின் போது ரிதிதென்னை பிரதேசத்திற்கு பொறுப்பான  கிராம உத்தியோகத்தர் சட்டத்தை மீறிய வகையில் செயற்பட்டுள்ளதாகவும் அடிப்படை உரிமை மீறப்பட்ட MC.ஹயாத்து முஹம்மது மற்றும் அவர்களது குடும்பத்தின் பெயர்கள்  ரிதிதென்னை கிராமத்திலேயே மீண்டும் வாக்காளர் இடாப்பில் பதியப்பட வேண்டும் என்று விசாரணை மேற்கொண்ட மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் AL.இஸ்ஸதீன் தீர்மானித்தார்.


மேலும் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அடிப்படை உரிமை மீறப்பட்ட MC.ஹயாத்து முஹம்மது மற்றும் அவர்களது குடும்பத்தின் பெயர்கள் ரிதிதன்னை கிராமத்திலேயே பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் 30 3 2021ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடிதத்தின் பிரதி அடிப்படை உரிமை மீறப்பட்ட MC.ஹயாத்து முஹம்மது அவர்களுக்கு  மனித உரிமை ஆணைக்குழுவினால் தபாலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.