கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கத்தின் மாகாண கண்காட்சி-2021

 


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கத்தின் கீழ் இயங்கும் 43 மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் றோபோட்டிக் (Robotics) பயிற்சி நிலையங்களின் தயாரிப்புகள்  தொடர்பான மாகாண கண்காட்சி கடந்த 2021.04.09 மற்றும் 2021.04.10 ஆம் திகதிகளில் கமு/அக்/அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில்  வெகுசிறப்பாக நடைபெற்றது.அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் MTA நாஹிப்  அவர்களின் நெறிப்படுத்தலிலும் கிராம அபிவிருத்தி திணைக்கத்தின் மாகாண பணிப்பாளர் N. தனஞ்சயன் அவர்கள் தலைமையிலிலும் நடைபெற்ற இக்காண்காட்சிக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிஹசிங்க அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் ULA அஸீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


12 வகுதி பொருட்களை கொண்ட தனித்தனி கண்காட்சிகூடங்கள், போட்டிப்பொருள்கள் அடங்கிய காட்சிகூடம், விற்பனை கூடங்கள், றோபோட்டிக் காட்சிகூடம் என மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பயிலுனர்களின் உற்பத்திகளும் புதிய கண்டுபிடிப்புக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.


இக்காண்காட்சியின் இரண்டாம் நாள் பரிசளிப்பு விழாவுக்கு  கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் ULA அஸீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிக் கேடயங்களையும் வழங்கி வைத்தார். இதன் போது முதலமைச்சின் செயலாளர் ULA அஸீஸ் அவர்களுக்கு அவரது 30 ஆண்டுகளை கடந்த அரச நிருவாக சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது


மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களிடையே 5 பிரிவுகளில் நடைபெற்ற உற்பத்திப்பொருள் போட்டிகளில் அம்பாறை மாவட்டம் 29 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இவ்வாண்டும் தொடர்ச்சியாக வெற்றிக் கேடயத்தை தனதாக்கி கொண்டது, மட்டக்களப்பு மாவட்டம் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், திருகோணமலை மாவட்டம் 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மூன்று மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறும் இக்ண்காட்சிகள்  2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெற்றது. 2022 இல் திருகோணமலையில் நடாத்தப்படவுள்ளது.


தகவல்:- M.C.M. HANIHF (RDO-Nintavur)