கல்முனையில்,வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App


 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இன்று (9)வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இதன் அறிமுக நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக். சுகாதார வைத்திய அதிகாரி அர்ஷாத் காரியப்பர் உட்பட வரி அறவீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த செயலியின் நோக்கம், பயன்பாடுகள் மற்றும் செயற்படுத்தும் முறைகள் தொடர்பாக அதன் வடிவமைப்பாளர் காமிஸ் கலீஸ் விளக்கமளித்தார்.
--