இலங்கை குடியரசான தினம்



இலங்கை (About this soundஒலிப்பு ) (Sri Lankaசிங்களம்ශ්‍රී ලංකාசிறீலங்காஇந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். 

இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு[ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

இன்று மே மாதம் 22ஆம் திகதி!

இலங்கை குடியரசான தினம்! சுதந்திரம் பெறப்பட்ட    காலம் முதல் இருந்து வந்த சோல்பரி யாப்புக்குப் பதிலாக 1972ஆம் ஆண்டு மேமாதம் 22ஆம் திகதி புதிதாக முதலாவது குடியரசு யாப்பு அமல்படுத்தப்பட்டது! 


இவ் அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் நிர்ணய சபையாக பாராளுமன்றத்துக்கு வெளியே நவரங்கஹல மண்டபத்தில் ஒன்றுகூடிப் புதிய யாப்பு குறித்துக் கலந்துரையாடி முடிவுகள் எடுத்தனர்!

 லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர், டி சில்வா முதலாவது குடியரசு யாப்பினைத் தயாரித்தார்!

அப்போது மகாதேசாதிபதியாக இருந்த வில்லியம் கோபல்லவ அவர்கள் முதலாவது சனாதிபதியாக நியமனமாகி
1978ல் அடுத்த குடியரசு யாப்பு அமுலுக்கு வரும்வரை அப்பதவியில் இருந்தார்!

1972 மே 22 அன்று இலங்கைக் குடியரசின் உதயம் குறித்து வெளியிடப்பட்ட தபால் முத்திரையை இங்கு நீங்கள் காணலாம்!

கூடவே குடியரசுயாப்பைத் தயாரித்த கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, முதலாவது சனாதிபதியாக விளங்கிய வில்லியம் கோபல்லவ ஆகியோர் காணப்படும் தபால்தலைகளோடு
அந்த அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட நிழல்படத்தையும் காணலாம்!