அக்கரைப்பற்று ஜனுஸ்-(முன்னாள் தொண்டர் ஆசிரியர்) விபத்தில் உயிரிழப்பு


 


இன்று மாலை அட்டப்பளத்தில் இடம் பெற்ற விபத்தில் அக்கரைப்பற்று பெரிய பள்ளியடியைச் சேர்ந்த ஜனுஸ் (வயது -48) முன்னாள் சிங்கள) 
தொண்டர் ஆசிரியர் காலமானார். இவர் பிரதி அதிபர் றியாசின் சகோதரரும் ஆவார்.

வேகமாக வந்த வேன் ஒன்று, டயர் வெடித்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் மீது  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இவருடன் பயணம் செய்த இவரது புதல்வர் கடுங்காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு கல்முனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.