இதுவரை நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் முழு விபரம்

நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இலங்கையில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 4,848,471 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (17) மாத்திரம் 21,685 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 103,846 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, இதுவரை 872,904 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 159,081 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் 14,517 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை 252,490 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ள நிலையில், 39,883 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 765,651 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. 


- Kayal