பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன் காலமானார்



பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன் காலமானார்.இயக்குநர் ராஜீவ் மேனனின் அம்மாவும், பிரபல பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன் உடல்நலக்குறைவால் காலாமானார். அவருக்கு வயது 80.


இவருடைய தாயார் கல்யாணி மேனன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகு மான் ஆகியோர் பல படங்களில் பின்னணி பாடியுள்ளார். சுஜாதா என்ற படத்தில், ’நீ வருவாய் என’, ’முத்து’ படத்தில் ’குலுவாளிலே முத்து வந்தல்லோ’, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், ’ஓ மணப்பெண்ணே’, விஜய்சேதுபதியின் ‘96’ படத்தில் காதலே காதலே உட்பட தமிழ், மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியுள்ளார்.



கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன். பிரபல பின்னணி பாடகியான இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1973ம் ஆண்டு அபலா என்ற படம் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமான கல்யாணி, தமிழில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.


மலையாளத்தில் அதிக பாடல்களைப் பாடியுள்ள கல்யாணி மேனன், ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் ’இந்திரையோ இவள் சுந்தரியோ’, ரஜினிகாந்த்தின் ‘முத்து’ படத்தில் சூப்பர் ஹிட் அடித்த 'குலுவாலிலே', ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் 'ஓமணப் பெண்ணே' உள்ளிட்ட பல பாடல்களை சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக தமிழில் 96 படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலை பாடியிருந்தார் கல்யாணி.




விதி வரைந்த பாதை வழியே ....நீ வருவாய் என நான் இருந்தேன் போன்ற பல பாடல்களை முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.இறக்கும்போது இவருக்கு 80 வயது.அன்னாரின் ஆத்மா சாந்தி பெறட்டும்.