இதுவரை தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும்


 


நிந்தவூரில் இன்று அஸ்ரா செனகா கொவிட்  தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை :  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர். 


நூருல் ஹுதா உமர் 


இன்று (11) காலை 8:00 மணி தொடக்கம் மாலை 2:00 மணிவரை கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற உள்ளன. இதுவரை தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் பொதுமக்களை அறிவித்தலொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார். 


அந்த அறிவித்தலில் மேலும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் சேவை மூலமும் இந்த தடுப்பூசிகள் வழங்குப்பட உள்ளதாகவும் நடமாடும் தடுப்புமருந்தேற்றல் சேவையும் தொடர்ந்து இடம்பெற இருப்பதனால் இச்சேவையினை பெற இதுவரையிலும் பதிவுசெய்து கொள்ளாதோர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக 0677284670 எனும் ஹொட்லைன் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.


மேலும் இன்று (11) காலை 8:00 மணி தொடக்கம் நண்பகல் 12:00 மணிவரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அஸ்ரா செனகா (AstraZeneca) கொவிட் 19 இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இரண்டாவது அஸ்ரா செனகா (AstraZeneca) தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மேலும் அந்த அறிவித்தலில் தெரிவித்துள்ளார்