ஆலையடிவேம்பில் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசி ஏற்றலின் தொடர் சேவை நாளை முதல்



வி.சுகிர்தகுமார் 0777113659

ஆலையடிவேம்பில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான  முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசி ஏற்றலின் தொடர் சேவை நாளை முதல் ஆரம்பமாவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பில் பிரதேசத்தில் இதுவரை 12500 இற்கும் மேற்பட்டவர்கள் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் சுமார் 8000 ஆயிரம் வரையிலான மக்கள் இரண்டாவது தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் தடுப்பூசி ஏற்றலின் தொடர் சேவை நாளை முதல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணின் மேற்பார்வையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
இதன் பிரகாரம் நாளை 07ஆம் திகதி காலை 8 மணிமுதல் 1 மணிவரை  கண்ணகிகிராமம் 1 2 ஆகிய பிரிவு மக்களுக்கு  கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்திலும்  அது போல் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஏனைய பிரிவு மக்களுக்கு காலை 8 மணிமுதல் 1 மணிவரை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேநேரம் நாளை மறுதினம் 08ஆம் திகதி  காலை 8 மணிமுதல் 1 மணிவரை  இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஏனைய பிரிவுகளுக்கு ஆலையடிவேம்பு திருநாவுக்கரவு வித்தியாலயத்திலும் , அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே இச்சந்தர்ப்பத்தை தவறாது தடுப்பூசி ஒன்றினையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பயன்படுத்தி தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதுடன் கொரோனா தொற்று நோயிலிருந்து அனைவரும் விடுபட வழி சமைக்குமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.