"இலங்கை தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை".


 


(க.கிஷாந்தன்)

இலங்கை தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லைமக்களுக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் இந்தியா தமிழகத்தில் திருச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்காதர்மொகிதீன் கலந்து கொண்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுஇலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை.

அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லைதமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள்  நிறைவேறவில்லை.

புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.

இலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்

இலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது.

30-வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.  மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்உலகம் முழுவதும் பொருளாதார தட்டுப்பாடு நிலவும் சூழலில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தமிழ் மற்றும் இலங்கை மக்களுக்கு விரக்தியான அரசாக தற்போது புதிய அரசு உள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு கழித்தே விரக்தி ஏற்படும் நிலையில் புதிய அரசு மீது புத்த மக்கள், மத குருமார்கள் என அனைவரும் விரக்த்தியில் இருப்பதை காணமுடிகிறது.

இலங்கையில் சீனா தங்களது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிக முதலீடு செய்து இருப்பதன் மூலம் காண முடிகிறதுஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இரட்டை குடியுரிமை வழங்கும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி இதுவரையும் வழங்கப்படாத இரட்டை குடியுரிமையை இந்திய அரசும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய பாஜக அரசு இலங்கை நட்புறவை அதிகம் பேணுகிறது, கடந்த காலங்களில் இந்த நட்புறவு அதிகமாக இருந்தாலும் சில நடவடிக்கைகள் பிரச்சினையாக இருந்தது.

ராஜீவ்காந்தி கொலை செய்ததாகவும் இருந்ததால் அதன் அடிப்படையில் போராளிகள் இயக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம்இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் வருவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு அதற்கான சட்ட திட்டங்கள் அதிகம் ஏற்படுத்தியுள்ளனர்.

புனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதுஉலகம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு போராளி குழுவும் ஒரு நாட்டில் தலை எடுப்பது கஷ்டம் என்றார்தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதை காண முடிகிறது, சுற்றுலாவை நம்பியுள்ள இலங்கையில் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால்தான் பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது.

அதனால்தான் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 6மாத காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும்கொரோனா முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்அதிமுக ஆட்சியில் கூட பல்வேறு திட்டங்கள் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ளது அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலகட்டத்தில், தற்போது மீண்டும் திமுக ஆட்சியின் ஊடாக அந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.