அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்து


 


நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று  பொத்துவில் பிரதான வீதியில்  சங்கமங்கண்டியில் திங்கட்கிழமை இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வீதியில்  பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி  வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

விபத்திற்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுடன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல்மாகாண பதிவிலக்கத்தை உடைய குறித்த முச்சக்கர வண்டியில் வாழைப்பழம் ஏற்றிவந்த நிலையிலையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொத்துவில் பொலிஸார் இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.