லசித் மாலிங்க ஓய்வு பெறுகின்றார்


 


சகல விதமான கிரிக்கெற் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக கிரிக்கிற் வீரர் லசித் மாலிங்க தெரிவிப்பு

சபரமாது லசித் மாலிங்க (Separamadu Lasith Malinga,சிங்களம்: සපරමාදු ලසිත් මාලිංගபிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். 

இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.[1] இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2]

பன்னாட்டு இருபது20 போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சாகித் அஃபிரிடி உள்ளார். 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 , 2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடர்களில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மார்ச் 7, 2016 வரை இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினார்