வசதி படைத்தோர் மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்- கலையரசன் எம்.பி


 


அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது : வசதி படைத்தோர் மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்- கலையரசன் எம்.பி 


நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் 


கொடுப்பவர்கள் கடவுளுக்குச் சமம் என்பார்கள். புலம்பெயர் தமிழர்கள் சிறுகைத்தொழில் வசதிகளை எமது மக்களுக்காக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையை நிலைபேறடையச் செய்யும்." என வேண்டுகோள் ஒன்றை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இக் கொரொனா தாக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ள நிலையில் சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் செய்துள்ள மக்கள் சேவையை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். இவரைப் போல் மற்றவர்களும் எம் மக்களுக்கு உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார். 


அன்னை சிவகாமி நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபனினால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை கோரக்கர் நலன்புரிச் சங்கம் ஏற்பாட்டில் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் மரநடுகையும் நடைபெற்றபோது அங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


அன்னை சிவகாமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபனினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வளத்தாப்பிட்டி, பழவெளி மற்றும் தம்பிநாயகபுரம் ஆகிய பின்தங்கிய கிராமங்களிலுள்ள கொரொனா தாக்கத்தினால் வாழ்வாதரமிழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  


இந் நிகழ்வில் கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்க தலைவரும், அதிபருமான சோமசுந்தரம் இளங்கோவன்,  கிராம சேவகர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டன