அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் Dr.ரவீந்திரன் ”ஒரு பொன் மனச் செம்மல்”
மருத்துவ சேவைக்கு அப்பால்,அம்பாரை மாவட்ட மக்களுக்கு மனிநேயப் பணியாற்றிய, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பலவருடங்கள் பொது சத்திர சிகிச்சை நிபுணராக சேவையாற்றி சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் சிறந்த மனிதாபிமானமுள்ள வைத்திய சிகிச்சை நிபுணர் Dr.பி.கே. ரவீந்திரன் சேரின் சேவைகள். அளப்பரியது.வைத்திய துறை மாத்திரமன்றி சமூக பணியிலும் தன்னை இணைந்து கொண்ட அவர் பல்வேறு உதவித்திட்டங்களையும் நமது பிரதேசத்தில் முன்னெடுத்திருந்தார்.

சமூக சிந்தனையுள்ள ஒரு நல்ல மனிதரின் இடமாற்றம் பெருங்கவலைதான். செல்லுமிடமெல்லாம் அவரது பணி சிறக்க பொது மக்கள் சார்பில் வாழ்த்துகளை www.ceylon24.com தெரிவித்துக் கொள்கின்றது.