முஸ்லிம் எயிட் நிறுவன உதவியுடன் வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு உலருணவுப் பொதிகள்


 


நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம்


கொவிட் 19 வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசினால் தொடர் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதனால் அன்றாட கூலித்தொழில் மூலம் வாழ்க்கை நடத்தும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் நோக்கில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கொவிட் 19 காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு முஸ்லிம் எயிட் நிறுவன உதவியுடன் 2500 ரூபாய் பெறுமதியான 185 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.


பிரதேச பள்ளிவாசல்கள், கிராம சேவகர்கள்  மூலம் தெரிவு செய்யப்பட்ட தேவையுடையோர்களுக்கான உணவு பொதிகளை வழங்கி வைக்கும் இந்நிகழ்வில் முஸ்லிம் எயிட் நிருவனத்தின் இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி, உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தகர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.