திருக்கோவில்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 93 வீதமான ஆசிரியர்கள் வருகை




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  திருக்கோவில்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 93 வீதமான ஆசிரியர்கள் சமூகமளித்துள்ள நிலையில்70 வீதமான மாணவர்களும் வருகை தந்துள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன்தெரிவித்தார். 

கல்விஅமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இன்று 200 மாணவர்களுக்கு உட்பட்ட 25 பாடசாலைகளில் கற்றல்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஆசிரியர்களும் மாணவர்களும்சமூகமளித்துள்ளதாக அவர் கூறினார். குறித்த25 பாடசாலைகளிலும் 180 ஆசிரியர்கள் கடமையாற்றிவரும் நிலையில் 168 ஆசிரியர்கள் வரவினைஉறுதிப்படுத்தியுள்ளதுடன் 1936 மாணவர்களில் 1364 மாணவர்களும் வருகை தந்துள்ளதாக அவர்குறிப்பிட்டார். சுமார்06 மாதங்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் பெற்றோர்கள்மாணவர்களை ஆர்வத்துடன் பாடசாலைக்கு அழைத்து வந்ததை காண முடிந்தது. இதற்கமைவாகஇன்று காலை முதல் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று விவேகானந்தாபாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளித்ததை காண முடிந்தது. பாடசாலையின்முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அத்தோடு பாடசாலையில் உள்நுழையும் மாணவர்கள் யாவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதைஅவதானிக்க முடிந்தது.மாணவர்கள்யாவரும் முகக்கவசம் அணிந்திந்ததுடன் கைகளுவும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். இதேநேரம்அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார பாடசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும்;பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.இந்நிலையில்பாடசாலையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களைமாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை எடுத்ததுடன் மாணவர்களுக்கான பாதுகாப்பதற்கான சிறப்பானசுகாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.