5 புலமைப்பரிசில் பரீட்சை அடைவுகளை மேம்படுத்துவதற்கான மாதிரிப்பரீட்சை மற்றும் கருத்தரங்கு



 


(எம்.ஜே.எம்.சஜீத்)

 

சுவடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அட்டாளைச்சேனைப் பிரதேச  பாடசாலைகளில் தரம் புலமைப்பரிசில் பரீட்சை அடைவுகளை மேம்படுத்துவதற்கான மாதிரிப்பரீட்சை மற்றும் கருத்தரங்கு முதற்கட்டமாக நேற்று (20) அட்டாளைச்சேனை அக்/ ஸஹ்ரா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

இதில் அக்/முகம்மதியா வித்தியாலயத்தின் அதிபரும் தரம் ற்கு கல்வி கற்பிக்கும் பிரசித்திபெற்ற ஆசிரியர்களுள் ஒருவரான ஹனஸ் வளவாளராக கலந்து கருத்தரங்கை சிறப்பாக நடாத்தினார். அத்துடன் நடாத்தப்பட்ட பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் உதவி கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எஸ். அம்ஜத் கான்  மற்றும் எமது சுவடுகள் அமைப்பின் ஆலோசகர்உளவளத்துணை ஆலோசகருமான அஷ்ரக் இஸ்மாயில்  மற்றும் ஸஹ்ரா வித்தியாலயத்தின் அதிபர் பைறுஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்