மகாசக்தி கிராமத்தில்,வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது




 


வி.சுகிர்தகுமார் 0777113659   



  இராணுவத்தின் மனிதாபிமான ஆளனி உதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கட்ட வீடு இருந்து திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் மகாசக்தி கிராமத்தில் வறுமைக்குட்பட்ட சித்த சுவாதீனமுற்ற தாயுடன் குடிசையொன்றில் வாழ்;ந்து வந்த இளம் யுவதி ஒருவருக்காக இராணுவத்தினரின் ஆளனி மற்றும் மேலதிக நிதியுதவியுடன் பூர்த்தி செய்யப்பட்ட வீடொன்றே இன்று கையளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு  பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம் பெற்ற வீடு திறப்பு விழாவில் கிழக்கு மாகாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  மாகாண கட்டளை அதிகாரி N;மஜர் ஜெனரல் ஏ.சி.லமாகேவா,  241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமான்டர் ஏ.சி.அபயகோன், நீத்தை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யு டி. என்.டி. வீரசிங்க உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும்;;  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான 55 வீடுகளும் 6 இலட்சம் பெறுமதியான 24 வீடுகளும் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய குறித்த வீடமைப்பிற்கான ஆளனி உதவிகள் அக்குடும்பத்தில் இல்லாத நிலையில் இராணுவத்தின் ஆளனி உதவியுடன் வீட்டினை நிர்மாணிப்பதற்கான பொறுப்பினை இராணுவம் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தி நிறைவு செய்துள்ளது.
இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட வீடு திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த கிழக்கு மாகாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் படைத் தளபதியை  பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து படைத் தளபதி மற்றும் வீட்டின் உரிமையாளர் இணைந்து வீட்டினை திறந்து வைத்தனர். பின்னர் மங்கள விளக்கேற்றியதுடன் வீட்டின் திறப்பும் பயனாளியான இளம் யுவதியிடம் கையளிக்கப்பட்;டது.
இதன் பின்னர் மரக்கன்றொன்றும் படைத் தளபதியால் நாட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து  வீட்டிற்கு தேவையான சில தளபாடங்களை நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் வழங்கி வைத்தார்.
இதேநேரம் அங்கு குழுமியிருந்த பொதுமக்களுடன் நட்புறவாக உரையாடிய படைத் தளபதி மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனரா எனவும் நலம் விசாரித்தார்.
நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைக்கு மத்தியிலும் இராணுவத்தினர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்ததுடன் இணைந்து மனிதாபிமான பணிகளை தொடர்ந்தும் முன்னெத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.