வீதி அபிவிருத்திகளுக்கான அடிக்கல் நடுவிழா


 


சேவை செய்வதில் ஏ.எல்.எம். அதாஉல்லா கட்சி வாதங்களுக்கு அப்பாற்பட்டவர் - வீதி அபிவிருத்திகளுக்கான  அடிக்கல் நடுவிழாவில் அக்கரைப்பற்று தவிசாளர் றாசிக் புகழாரம் ! 


நூருல் ஹுதா உமர் 


நீண்ட காலமாக மக்களின் தேவையாக காணப்பட்டு வந்த வீதிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்த தேசிய காங்கிரஸின் தலைமை ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும், இவ்வீதிகளை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எல்லோருக்கும் இப்பிராந்திய மக்கள் சார்பில் அக்கரைப்பற்று பிரதேச சபை தலைவர் என்றவகையில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஏனையவர்கள்  போன்று அடிக்கற்களை நாட்டிவிட்டு போகின்றவர்களாக தேசிய காங்கிரஸினர் எப்போதும் இருந்ததில்லை. கிழக்கின் அபிவிருத்திகளில் கணிசமானவற்றை செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா சேவை செய்வதில் பிரதேச மற்றும் கட்சி வாதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதற்கு இன்று திறந்துள்ள பதாதையில் பொறிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே சாட்சியாக உள்ளது என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் தெரிவித்தார். 


அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை, பள்ளிக்குடியிருப்பு, சம்பு நகர் உள்ளக வீதி 130.8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்ய அடிக்கல் நடப்பட்டதுடன் மேலும் பட்டியடிப்பிட்டி, பள்ளிக்குடியிருப்பு கரையோர வீதி 170.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ்விரு வீதிகளும் செவ்வாய்க்கிழமை (19) மாலை  தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ எல் எம் அதாவுல்லா அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர், பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.எம். ஐயூப், ஏ.ஜி.பர்சாத், முஹம்மத் சஹாப்தீன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வு பெற்ற பிரதம பொறியியலாளர் என்.டீ .எம். சிராஜுதீன், வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கரைப்பற்று காரியாலய பிரதம பொறியியலாளர் எம் ஐ. அஹகமட் சஜீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கரைப்பற்று காரியாலய உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.