தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரொனா தொற்றுக்கு இலக்காயிளர்




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கொரோனா தொற்றுநோய்க்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர் என   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன்  தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(22) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கடந்த 3 தினங்களாக கல்முனை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டு நிலைமை தளர்த்தப்பட்ட நிலையிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் கொவிட் -9 தொற்று அதிகரித்த நிலைமையை காட்டியுள்ளது.10 தொடக்கம் 20 வீதம் வரையான கொவிட் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது.

இதனடிப்படையில் எமது கல்முனை பிராந்தியத்தில் 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.தொற்றுக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.