ட்விட்டரின் சில கணக்குகளை முடக்க அழுத்தம்




 


ட்விட்டரில் தவறான தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கர்நாடக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

இதுபோன்ற "பல" உத்தரவுகளை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், ஆதாரங்களுடன் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அரசாங்க உத்தரவை அமல்படுத்தத் தவறினால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அந்த விவகாரத்தில் தற்போதுதான் ட்விட்டர் நிறுவனம் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் 2.4 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களை ட்விட்டர் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சில மணி நேரத்தில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அனைத்து வெளிநாட்டு இணையதள நிறுவனங்களும் இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தவறான தகவல்களை பரப்பும் நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு ட்விட்டர் நிறுவனத்தை அரசுத்தரப்பு தொடர்ந்து வலியுறுத்திய போதும், அதனை பொருட்படுத்தாமல் இருந்ததால், கடந்த மாதம் ட்விட்டருக்கு அனுப்பிய கடிதத்தில், அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே "கடைசி வாய்ப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகளை ட்விட்டர் நிறுவனத்துக்கு அரசு விடுத்திருந்தது. அதாவது "நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும்" வகையில் இருக்கும் இணைய உள்ளடக்கங்களை முடக்குவதற்கு இந்த சட்டம் அரசாங்கத்தை அனுமதிக்கிறது.

    எனவே, இந்த சட்டத்தின்படி விடுக்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறினால் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதால், "அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மை" காரணமாக ட்விட்டர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளதாக இதுகுறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    உதாரணமாக, பல சந்தர்ப்பங்களில் முழு கணக்குகளும் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது ட்விட்டர் நிறுவனத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலின் சமீபத்திய நடவடிக்கையாகும்.

    சில கணக்குகளை முடக்க கோரும் இந்திய அரசு: எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற ட்விட்டர் நிறுவனம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    பொது ஒழுங்கை காரணம் கூறி, கடந்த ஓராண்டாக பல முறை அரசு தரப்பு, நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டு வருகிறது. கடந்த ஆண்டு விவசாயிகள் நடத்திய மிகப் போராட்டங்கள் தொடர்பான கணக்குகள் மற்றும் ட்வீட்கள், கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் ட்வீட்கள் ஆகியவை இதில் அடக்கம்.

    அரசாங்கத்தின் நோட்டீசுக்கு இணங்கும் விதமாக, புலனாய்வு செய்தி இதழின் கணக்கு மற்றும் பல மாதங்களாக நடந்த விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்த ஆர்வலர்கள் மற்றும் குழுக்களின் கணக்குகள் உட்பட சுமார் 250 கணக்குகளை ட்விட்டர் தற்காலிகமாக முடக்கியது.

    ஆனால், தற்காலிகமான தடையை நீட்டிப்பதற்கு "போதுமான நியாயம் இல்லை" என்று குறிப்பிட்டு ட்விட்டர் அக்கணக்குகளை ஆறு மணி நேரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது.

    கடந்த ஆண்டு பிப்ரவரியில், "இந்தியாவில் வணிகம் செய்ய வரவேற்கிறோம்," அதே சமயத்தில் "ட்விட்டர் நிறுவனம் தனது விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல்" நாட்டின் சட்டத்தை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலுள்ள தனது நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு காவல்துறையினர் வந்த சம்பவத்தை அடுத்து, நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்த கவலைகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

    பாரதிய கட்சியின் பதிவொன்றை "உண்மைக்கு புறம்பாக மாற்றப்பட்ட உள்ளடக்கம்" என்று ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டதை அடுத்து டெல்லி காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்று நோட்டீஸ் வழங்கினர்.

    ட்விட்டர் மனுவில் கூறியிருப்பது என்ன?

    ட்வீட்களை அகற்றுமாறு இந்தியாவின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உள்ளடக்கங்களை முடக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவுகளில் சிலவற்றை மறு ஆய்வு செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த அந்த மனுவின் விவரங்கள் பிபிசிக்கு கிடைக்க பெற்றது. அதில் உள்ளடக்கங்களை முடக்க கோரும் அரசின் உத்தரவுகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் பயனர்களுக்கு கொடுத்துள்ள உரிமைக்கு எதிராக உள்ளது என கூறியுள்ளது.

    மேலும், ஒரு பதிவின் குறிப்பிட்ட பகுதியோ அல்லது முழு பதிவோ உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டிருந்தால் அந்த குறிப்பிட்ட பதிவுகள் மட்டுமே நீக்கப்படும் என்றும் அந்த கணக்கு நீக்கப்படாது என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே டெல்லி உயர்நீதிமன்றத்தில் பலமுறை கூறியுள்ளது என்று ட்விட்டரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ட்விட்டர் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 200 பிரிவு 69Aவின் (எந்தவொரு கணினி ஆதாரத்தின் மூலமாகவும் ஒரு தகவலின் பொது அணுகலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதற்கான அதிகாரங்கள்) கீழ் வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.