இந்திய வீரர்களை கடுமையாக விமர்சிக்கும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்




 


நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் விளையாட்டுத் திறமையைக் காட்டவில்லை என்று தி கிரானிக்கிள் செய்தித்தாள் தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.


மேலும் அது, "காயம் மிகவும் ஆழமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி கோப்பையுடன் கொண்டாடிய நேரத்தில், இந்திய வீரர்கள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்," என்று எழுதியிருந்தது.


இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வி அடையாத இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதால், இந்த வெற்றியும் சிறப்பு வாய்ந்தது என்று அந்த நாளிதழ் எழுதியிருக்கிறது.


"1 லட்சத்து 30 ஆயிரம் திறன் கொண்ட மைதானம் காலியாக இருந்த நேரத்தில் கோப்பையை ஒப்படைத்ததால், இந்த மாபெரும் சாதனையின் அளவை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது குழுவினர் உணர்ந்திருக்க மாட்டார்கள்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.


"மேலும், கோப்பை ஆஸ்திரேலிய அணியிடம் ஒப்படைக்கப்பட்ட சமயம், இந்திய அணி களத்தில் எங்கும் காணப்படவில்லை," என்று அந்தச் செய்தி கூறுகிறது.


"இந்திய வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் இது விளையாட்டின் நன்னடத்தைக்கு எதிரானது," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தச் செயலை வெளிப்படையாக விமர்சித்ததாக ‘தி க்ரோனிக்கிள்’ கூறுகிறது. ஆனாலும் அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.


இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தயார் செய்யப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்


'ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது'

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் கருத்துகளை ‘ஹெரால்ட் சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அவர் ஆடுகளம் தொடர்பான இந்தியாவின் வியூகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.


தயார் செய்யப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக பாண்டிங் கூறியுள்ளார்.


"கடந்த மாதம் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதே ஆடுகளத்தில்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் நடந்தது," என்று அவர் கூறியதாக அந்தச் செய்தித்தாள் எழுதுகிறது.


"பாட் கம்மின்ஸும் முந்தைய நாள் ஆடுகளம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா இலக்கை சிறப்பாகத் துரத்த புல்வெளி உதவியது," என்றிருக்கிறார் அவர்.


போட்டிக்குப் பிறகு ரிக்கி பாண்டிங் கூறுகையில், “இந்த ஆடுகளம் நான் எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தது. இது எதிர்பார்த்ததை விட குறைவாகவே சுழன்றது, ஆனால் அனைவரும் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக பந்து வீசினர்,” என்றார்.


போட்டிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அணியின் தோல்விக்கு ஆடுகளத்தை காரணம் கூறவில்லை. அவர் "இரவு விளக்குகளின் கீழ் இது கொஞ்சம் சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் இப்போது நான் எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை," என்றார்.


வர்ணனையின் போது, பாண்டிங், “உண்மையைச் சொல்வதானால், ஆடுகளம் நன்கு தயாரிக்கப்பட்டதே, இந்தியாவுக்குப் பின்விளைவை ஏற்படுத்தியிருக்கலாம்," என்றார்.


அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியைவிட ஆடுகளத்தை நன்றாகப் புரிந்துகொண்டதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.


இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நிலவிய அமைதி கம்மின்ஸுக்கும் அவரது அணியினருக்கும் பொன்னான தருணம்' என்று ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது


'ஆஸ்திரேலிய வீரர்களின் குரல் மட்டுமே மைதானத்தில் எதிரொலித்தது'

‘தி ஏஜ்’ பத்திரிகை, ‘90,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சத்தம் எழுப்பிய மைதானத்தில், விராட் கோலியின் விக்கெட் வேரோடு பிடுங்கப்பட்ட சத்தத்திற்குப் பிறகு, 11 ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகக் குரல்கள் மட்டுமே கேட்டன,’ என்று எழுதியிருக்கிறது.


அது மேலும், "கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், கம்மின்ஸ் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார், பின்னர் மீதமுள்ள பணியை டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுசேன் இடையேயான 192 ரன்களின் பார்ட்னர்ஷிப் மூலம் முடித்தார்," என்று எழுதியிருக்கிறது.


“ஆடுகளத்தை விட்டு கோலி வெளியேறினாலும், ஹெட்டின் சதம் அடித்த தருணத்தில், நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நிலவிய அமைதி கம்மின்ஸுக்கும் அவரது அணியினருக்கும் பொன்னான தருணம். இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூட கோப்பையை கம்மின்ஸிடம் ஒப்படைக்க தாமதப்படுத்தினார்,” என்று அந்தச் செய்தித்தாள் எழுதியிருக்கிறது.


இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது தனது அணியின் மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் கருதுகிறார்


கம்மின்ஸ் ஒரு துணிச்சலான தலைவர் என்பதை நிரூபித்தார்

‘தி சண்டே மார்னிங் ஹெரால்ட்’ பத்திரிகை, 'இந்தியாவில் உலகக் கோப்பையை வெல்வது கிரிக்கெட்டின் உச்சம்’, என்று கூறியதாக எழுதியிருக்கிறது.


இந்தியாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது தனது அணியின் மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் கருதுவதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.


கம்மின்ஸ், “இது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்தியாவில் இதுபோன்ற பார்வையாளர்களுக்கு முன்னால் வெற்றி பெற்றது. இது நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாகும். எங்கள் அணி ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்,” என்று அவர் கூறியதாக அச்செய்தித்தாள் கூறுகிறது.


மேலும், கம்மின்ஸைப் பாராட்டி எழுதியிருக்கும் அந்த நாளிதழ், “முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை, அடுத்த ஒன்பது போட்டிகளிலும் வெற்றிபெறச் செய்த கம்மின்ஸ் ஒரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்," என்று கூறியிருக்கிறது.


தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சியில் விற்பனை செய்யப்பட்ட அடிமைகளின் வரலாறு

18 நவம்பர் 2023

ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தாலே விபத்து, ஆயுள் காப்பீடுகள் உண்டு - எப்படி பெறுவது?

18 நவம்பர் 2023

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நீங்கள் பார்க்கும் வீடியோ மூலம் இவர்கள் சம்பாதிப்பது எப்படி?

7 நவம்பர் 2023

ODI விதியை மாற்றக் கோரிக்கை

ஒருநாள் கிரிக்கெட்டின் விதியை மாற்றுமாறு கோரிய மிட்செல் ஸ்டார்க்கின் கருத்தை கெய்ர்ன்ஸ் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.


ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்று மிட்செல் ஸ்டார்க் கருதுகிறார்.


ஏனெனில் இது ஆட்டத்தை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இந்த உலகக் கோப்பையின் எட்டு ஆட்டங்களில் சராசரியாக 43.40 மற்றும் எகானமி ரேட் 6.55-இல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது அவர்களின் சிறந்த செயல்திறன் அல்ல, 2015 மற்றும் 2019 உலகக் கோப்பைகளை விட மோசமானது."


ஸ்டார்க், தனது திறமைக்கு ஏற்றவாறு செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டதாகக் கூறினார், ஆனால் 25 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தைப் பயன்படுத்துவது ரிவர்ஸ் ஸ்விங்கை மிகவும் கடினமாக்கியது, குறிப்பாக பகலில்.


இந்த உலகக் கோப்பையில் பகலில் பந்துவீசும்போது ஸ்டார்க் பவர் பிளேயில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக இரவில் பந்துவீசும்போது சிறப்பாகச் செயல்பட்டார்.


"நான் ஒரு பந்து தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன், இரண்டு அல்ல," என்று அவர் கூறினார்.