மகிழ்ச்சி முகாம்





நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் கீழ் இறக்காமம்-05 ஆம் பிரிவு  நியூ குன பிரதேசத்தில் இயங்கும் யஷோதரா மகளிர் சங்கமும், உளச் சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்திலும் (Foundation for Promotion of Mental Health) இணைந்து பொதுமக்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மகிழ்ச்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த கிராமத்தில் உள்ள முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், விசேட தேவையுடையவர்கள்,  கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் இம் மகிழ்ச்சி முகாம் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஷ்ஷான் (நளீமி) அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் உளச் சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் தலைவரும் சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு பிரகீத், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுரேகா எதிரிசிங்க, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம் மகிழ்ச்சி முகாமில் உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள், மகிழ்ச்சிகரமாக வாழும் கலை, முரண்பாடுகளை இனங்காணலும் முகாமை செய்தலும், இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள் நிகழ்வுகள், குழுப் பயிற்சி மற்றும் செயற்பாடுகள், சிறுவர் விளையாட்டுகள், சித்திரம் வரைதல் போட்டிகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள்  என முழு நேரத்தையும்  பங்குபற்றுநர்கள் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் தீச் சுடர் முகாம் நடைபெற்றது. பங்குபற்றுநர்களின் விசேட கலைத் திறமைகள், ஆற்றல்கள் என்பது  அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.