Showing posts with label Crime. Show all posts

 


பாம்பன் அருகே முந்தல்முனை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி ரூபாய்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை

 


பாறுக் ஷிஹான்


அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை  இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டபணமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகம் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.இதன் பின்னர் சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும்  மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை  பொலிஸாரால் அவர்  கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை  செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில்   செவ்வாய்க்கிழமை(30) அன்று குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர்  உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான்  எம்.எஸ். காரியப்பர் வீதிப் பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்ட மன்று  1 500 ரூபா தண்டபணமும் 55 000 ரூபா நஷ்டஈடும்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபரின் சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் இசட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திப் பின்னணி


வீதிப் பெயர் பலகையை இடித்துச் சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன் கைது- பிணையில் செல்ல அனுமதி 

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக   ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் விசாரணை  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 அநுராதபுரம் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையினூடாக தெரியவரும் என பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 80 கிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களில் ஒருவர், அநுராதபுரம் பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, திடீர் சுகவீனமுற்ற நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி 22 வயதான சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நீண்டகாலமாக போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்


 சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதானவர்கள் மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.


இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்


 (வி.சுகிர்தகுமார்)0777113659  


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஃ3 இல். அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (26) பட்டப்பகலில் உட்புகுந்த திருடன் தாலி மற்றும் மாலை உள்ளிட்ட 14 பவுண் மதிக்கத்தக்க தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் வசித்துவரும் கணவனும் மனைவியும் தொழிலுக்கு சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாருமற்ற நிலையில் திருடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கிரிலை அகற்றி உட்சென்று அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சம்பவ தினமான இன்று வைத்தியசாலையில் கடமை புரியும் கணவனும் மனைவியும் வழமைபோன்று தனது இரு பிள்ளைகளையும் சகோதரியிடம் விட்டு விட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதேநேரம் வீட்டு உரிமையாளரின் சகோதரி இரு பிள்ளைகளையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்றுள்ளதை அவதானித்து அயலவர்களின் உதவியை கோரியுள்ளார்.
ஆயினும் வீட்டின் அலுமாரியில் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வீட்டின் உரிமையாளர் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிசார் தீவிர விசாரணையை ஆரம்பித்ததுடன் அம்பாரையில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேட தடயவியல் பொலிசார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையிட்டவனை அடையாளம் காணும் நடவடிக்கையில் பிரயத்தனத்துடன் ஈடுபட்டனர்.
இதேநேரம் இச்சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளதுடன் பொதுமக்களின் உதவியும் கொள்ளையனை கைது செய்ய பெறப்பட்டதுடன் விசாரணைகள் பல்வேறு கோணங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்று நோய் விடுதிக்கு பொறுப்பான விசேட வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

 


(Reports/Spark
கவிஞர் வைரமுத்து குரலில் Deepfake வீடியோ தயாரித்து அவதூறு பரப்பிய செந்தில்நாதன் என்பவர் கைது!

கைது செய்யப்பட்ட செந்தில்நாதனை பிப்ரவரி 2-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!!


 


பொத்துவில்- மட்டக்களப்பு தனியார் பஸ்  சாரதி மீது இன்று மாலை 6:15 அளவில் சின்ன முகத்துவாரம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், பலத்த காயங களுக்குள்ளான சாரதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள் என்பதாக தெரியவருகின்றது

 


நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.


அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்)  சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.


நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.


மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது பொலிஸ் நிலையத்தை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் அவையின் பொருத்தனைகளைில்  ஒன்றான மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் குற்றவியல்,பொருத்தனை ஒழுங்கு விதிகளை மீறியதற்காக, இஸ்ரேலுக்கு எதிராக குற்றவியல் பிரேரனையினைக் கொண்டு வருகின்றது.

தென்னாப்பிரிக்கா குடியரசு போப்ரோசீடிங் நிறுவனங்கள் இஸ்ரியல் நிலைக்கு எதிராக மற்றும் தற்காலிக நடவடிக்கைகளைக் குறிப்பிடுமாறு நீதிமன்றங்களைக் கோரும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.


(புதுப்பிக்கப்பட்ட செய்தி)

அம்பாரை நீதிமன்ற பதில் நீதிபதி அசோக அவர்களால், அக்கரைப்பற்று சித்திக் ஹாஜியாரின் கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் ஜனவரி 8ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 18 வயது நிரம்பிய சசிகரன் தனுஸ்கன்  என்பவராவார்.இவர் அக்கரைப்பற்று காந்தி வீதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வாங்காமத்தில் மரணித்தவரின் ஆட்டுப் பண்ணை காலை வீட்டில் குடியிருந்தவராவார்.

 கொலைசெய்யப்பட்டவருடன் சம்பள முரண்பாடு பற்றி பேசிய வேளையில், தனக்கு அவர் அடித்ததாகவும், பின்பு அவரைத் தாக்குவதற்கு கம்பு ஒன்றைத் தேடிச் சென்றதாகவும், கம்பு இல்லாததால், கோடரியால் கொத்திக் கொலை செய்ததாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர் பொலிசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

 குறிப்பிட்ட சந்தேந நபரை இறக்காமம் பொலிஸ் சார்ஜான்ட் தசீர் அம்பாரை நீதவான் நீதிமன்ற வழக்கிலக்கத்தில்  (B/4925/2023) ஆஜர்படுத்தியிருந்தார்.





 (முந்தைய செய்தி)

அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் சடலமாக மீட்பு!  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் 


இறக்காமம் – வாங்காமம் பகுதியில்,அக்கறைப்பற்றைச் சேர்ந்த சித்திக் ஹாஜியார் என்ற நபர் (63 ) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நேற்றைய தினம் தனது ஆட்டுப்பண்ணைக்கு சென்ற அவர் காணாமல் போயிருந்த நிலையிலயே இன்று காலை அவரின் ஜனாசா வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.முதலாளியை கொலை செய்த இளைஞர்கள்


அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இடம்பெற்றிருக்கிறது பின்னர் நேற்று முழுவதுமாக அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைக்கப்பட்டு நேற்று இரவு அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது 

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பல வருடங்களாக இருப்பிடம் கொடுத்து அவர்களுக்கு தொழிலும் கொடுத்து அதற்கான ஊதியமும் கொடுத்த சிறந்த ஒரு நல்ல மனிதர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது தெரிய வருகிறது 

முதலாளியிடம் இருந்த முதலாளிக்கு சொந்தமான ஆடுகளை திருடி விற்பனை செய்ததன் காரணமாக அதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சடலம் வாங்காமம் பகுதியில் உள்ள கரும்பு காணி ஒன்றினுள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை நீதிமன்ற நீதவான் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவரிடம் வேலை செய்த நபர்களிடம் 75 ஆடுகள் உள்ள பண்ணையில் 17 ஆடுகளை மாத்திரம் அவதானித்த அவர் இதனை பற்றி வினவியபோது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாத தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பில் 21 மற்றும் 19 வயது இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 


பாறுக் ஷிஹான்


மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும்  14 நாட்கள்  விளக்கமறியலில்  எதிர்வரும் ஜனவரி  மாதம் 04 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு   வியாழக்கிழமை (21)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் நீண்ட சமர்ப்பணங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

செய்தியின் பின்னணி

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 

13 வயது மாணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த செவ்வாய்க்கிழமை (5)   மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 


பாறுக் ஷிஹான்


உணவக உரிமையாளரது மனைவியான  காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து  கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


 இந்தியர்களால் தனது மனைவியிடம்  3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை  திறந்து பார்த்துள்ளார்.


அங்கு  அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து  தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக  முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

 


அக்கரைப்பற்று பேரூந்து நிலையத்தில்,SLTB நேர முகாமையாளரைத் தாக்கிய தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் அம்பாரை வைத்தியசாலையில் தப்பிச் சென்று தஞ்சமடைந்தனர் குறிப்பிட்ட தனியார் ஊழியர்கள் இருவரையும் வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் வைக்குமாறு அக்கரைப் பற்று நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த பஸ் சாரதியும், நடத்துநரும் அந்த உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்

முந்தைய செய்தி

இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் பணி பகிஷ்கரிப்பு!


அபு அலா, அப்துல் ஹமீட்


இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் இன்று காலை முதல் (08) பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் அறிவிப்பு!


இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபை ஆகிய இரு போக்குவரத்து சபைகளும் ஒருங்கிணைந்த சேவைகளை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுத்து வருகின்றனர். இச்சேவையில் ஈடுபடுகின்ற தனியார் போக்குவரத்து பஸ் சாரதிகளும், நடத்துநர்களும் நேர அட்டவணையின் பிரகாரம் ஒருபோதும் நடப்பதில்லை. இத்த தவறுகளை உரியவர்களுக்கு சுட்டிக்காட்டியும் அத்தவறுகளை தொடர்ந்தும் செய்து வருவதாக அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் தெரிவித்தார்.


இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 


இன்று காலை 7.30 மணிக்கு அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்திற்கு வந்தடைய வேண்டிய தனியார் பஸ் ஒன்று, நேரம் தவறி வந்த விடயத்தை  இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தரினால் சுட்டிக்காட்டப்பட்டபோது குறித்த பஸ் சாரதியும், நடத்துநரும் அந்த உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் காயமுற்ற அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


இச்சம்பவத்தை எதிர்த்தும், உரிய சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், இது தொடர்பில் எங்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் என அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் மேலும் தெரிவித்தார்.


இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் அம்பாறை, கல்முனை, பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு செல்கின்ற பிரயாணிகள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம் கல்முளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட,,கல்முனையைச் சேர்ந்த  மெளலவியை விளக்க மறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

செய்திப்பின்னணி-


13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 

13 வயது மாணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் இன்று(5) இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது  சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை(2)  அன்று  சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


 !வி.சுகிர்தகுமார் 0777113659 )


 ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி போலியான முகநூலை திறந்து பதிவிட்ட நபர் ஒருவருக்கு இருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, அதில் ஒரு வருடத்தை கடூழிய சிறைத் தண்டனை  விதித்ததுடன், ஒரு வருடத்திற்கு தன்டனையை  ஒத்திவைத்தும், -நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.
நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பில்aa பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார். இந்நிலையில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அந்நபர் குற்றவாளியாக ஆதரபூர்வமாக மன்றுறுதிப்படுத்திய நிலையில் நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.

 


பாறுக் ஷிஹான்


சிசிடிவி கமராவின் வன்பொருள்(HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம இன்று அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சிசிடிவி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


மேலும் குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக  சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட      மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு மீண்டும்  பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.



அத்துடன் நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜரபடுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திப்பின்னணி-

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 

13 வயது மாணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் இன்று(5) இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது  சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை(2)  அன்று  சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.