Showing posts with label Crime. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் இன்று விரிவான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, நுகர்விற்கு பொருத்தமற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வியாபாரிகள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, எதிர்காலத்தில் இத்தகைய குறைபாடுகள் இடம்பெறாத வகையில் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இணைந்து செயற்பட்டு, பரிசோதனைகளை திறம்பட முன்னெடுத்தனர்.

சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பதாவது, இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் எனக் கூறினர்.

 


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மதத்துக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலேயே இக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) அபிமானி ஜன ஜய கட்சி இன்
று (30) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன், அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டியிருந்த 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாயமானமை மற்றும் திறைசேரி நிதி கையாடல் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.


இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் பிரதீப் சார்லஸ் தெரிவிக்கையில், நலிந்த ஜயதிஸ்ஸவின் கருத்துப்படி மேலும் ஒரு தொகுதி பணம் வேறு சில தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 


இவ்வாறான நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், நாட்டின் நிதித்துறையில் இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவும் போது பொதுமக்கள் எவ்வாறு வங்கிகளை நம்பி தமது பணத்தை வைப்பு செய்வார்கள் என கேள்வி எழுப்பினார். 


அத்துடன், திருடர்களைப் பிடிப்பதற்கான வேலைத்திட்டத்தை வெறும் 20 நாட்களில் முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதன்போது கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் இளைஞர் விவகார செயலாளர் ரவீந்திர நிஷாங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நிதி விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தி, காணாமல் போன பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 


திறைசேரியில் இருந்த பணம் முறையற்ற வகையில் கையாளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்திற்கு மிக விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஞான பிரசாந்தன்


 AI ஆல் உருவாக்கப்பட்ட படம்)


கொழும்பு 11இல் சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வியாபாரி ஒருவருக்கு ரூபா 2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.


குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இவ் விடயம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.


அதிகபட்ச சில்லறை விலையான கிலோ ரூ 240 கொண்ட 5 கிலோ சம்பா அரிசி, நுகர்வோருக்கு ரூ 1425இற்கு அதாவது, ஒரு கிலோ ரூ 285 இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் நேற்று (28) குறித்த வியாபாரி மீது மாளிகாககந்த நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் விற்பனையாளருக்கு ரூ 2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

 


யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


கைதான அவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன்போது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 


யாழ்ப்பாணத்தின் இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இளவாலை பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை அர்ச்சுனாவும் மற்றொரு தரப்பினரும் உரிமை கோரி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று (25) குறித்த காணியை சுத்தம் செய்வதற்காக அர்ச்சுனா சென்றபோது அங்கு வந்த இரு பெண்கள் அதனை தடுத்துள்ளனர்.


இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தனது தற்காப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்த பெண்களை அச்சுறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பொதுமக்களும் தன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக அர்ச்சுனா எம்.பி தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உளவுத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது நிகழ்ந்தது .


பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான இனிப்புகள் நிரப்பப்பட்ட போலி அடிப்பாகம் கொண்ட சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள் இவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துவந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.


ஒரு அனுசரணையாளர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று பாங்காக்கிற்குப் பயணம் செய்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைபேசி ஆதாரங்கள் காட்டியதாகக் கூறப்படுகிறது.


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், அங்கு துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்றும் விவரிக்கப்படுகிறது.


நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


 


மட்டக்களப்பு நகரில் கட்டுப்பாட்டை இழந்த லொறி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது!


மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள  "தயா லிக்கர் ஷாப் " (Thaya Liquor Shop) முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளிய சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது 


 லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளன.

 அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சாரதியின் கவனக்குறைவு அல்லது தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமானதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதவான் திரு.RPJ  ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 4ம் திகதி வரை (இன்றிலிருந்து 14 நாட்களுக்கு), விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார்.

இவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி  பொலிசார், பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கில் சந்தேக நபராக உட்படுத்தி,  களுவாஞ்சிக்குடி  நீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.

இதேவேளையில், இதே நீதிமன்றில் பதில் பதிவாளராகப் பணியாற்றி வந்த திரு.ரமேஸ் என்பவர் சுமார் 18 மில்லியன் பெறுமதியான (தங்க நகைகளை) சான்றுப் பொருளைக் கையாடல் செய்த குற்றத்திற்காக, விளக்க மறியலில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில், களுவாஞ்சிக்குடியில் ்இட்ம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, நீதிமன்றில் பணிபுரியும்  அதிகாரிகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி திரு. பிரபாகரன் அவர்களினால்,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீதிபதிகள் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில்  விசாரணைகளை அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிபதியாகவிருந்த திரு.ரஞ்சித்துமார் 2026 முதல் சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழு. 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில், ஒழுக்காற்று விசாரணைகளின் பின்பு இவரை இடைநிறுத்தியுமிருந்தது.

களுவாஞ்சிக்குடி பொலிசார், களுவாஞ்சிக்குடியில் காணமல் போயிருந்த  1.5 மில்லியன் பெறுமதியான மரக்குற்றிகள் தொடர்பில் சந்தேக நபராக திரு.ரஞ்சித் குமாரைப் பெயரிட்டிருந்தனர்.

இன்றைய தினம், நகர்வு மனு ஒன்றினை சிரேஸ்ட சட்டத்தரணி மனார்தீன் மூலமாக, திரு.ரஞ்சித் குமார் ஆஜராகியிருந்தார். சிரேஸ்ட சட்டத்தரணிகளான பாறுாக், முபீத். இஹ்லாஸ்,மற்றும் இயாஸ்தீன் சுஜிதாஸ் தனுசியா, பசீல், கிருபாகரண், ஆகியோர் சந்தேக நபரான ரஞ்சித்குமார் ஆகியோர் சார்பில் ஆஜராகினர்.

சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களின் பின்பு, ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 4ம் திகதி வரை (இன்றிலிருந்து 14 நாட்களுக்கு), விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார்.
 

 

 


அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரீவ்போர்ட் நகரில் ஷ்ரீவ்போர்ட் நகரில்   ஷ்ரீவ்போர்ட் நகரில்  1 முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஒரு குடும்பத் தகராறு என காவல்துறை விவரித்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று, தாக்குதல் நடத்தியவர் 10 பேரைச் சுட்டுவிட்டு ஒரு காரில் தப்பிச் சென்றார். பின்னர், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அந்த சந்தேக நபர் கொல்லப்பட்டார்.

 


மட்டு மண்முனையில் சிறுவன் ஒருவரை பலிகொடுத்;து  புதையல் தோண்ட முற்பட்ட இடத்தில் புலிகளின் ஆயுதத்தை தேடி 8 மணித்தியாலம் தோண்டும் நடவடிக்கை முன்னெடுப்பு – எதுவும் கிடைக்கவில்லை  



(கனகராஜா சரவணன்)



காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டிய சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்த சம்பவ இடத்தில் புலிகளின் ஆயுதத்தை தேடி நீதிமன்ற அனுமதி பெற்று பலத்த  பாதுகாப்புக்கு மத்தியில்; இன்று திங்கட்கிழமை(13) தோண்டும் நடவடிக்கை 8 மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத தோண்டும் நடவடிக்கை நிறுத்தி முடிவுக்கு கொண்டு வந்தனர்.



கடந்த மார்ச் 31 ம் திகதி இரவு மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் குழு ஒன்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு தகவல் ஒன்று கிடைத்தது.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த வீட்டின் உரிமையாளரான முதியவரான பெண் ,மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மற்றும் மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிராக்கொட, பொன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 8 பேருடன் பொலன்னறுவையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேரை  கைது செய்ததுடன் பூஜை பொருட்களை மீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து நீதிமன்றம்  20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பான விசாரணைகளையடுத்து அங்கு புலிகளின் ஆயுதம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் அதை தோண்டுவதற்கு  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். யறூஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை (13) தலைமையில் மாவட்ட தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர். மற்றும் விசேட அதிரடிப்படையினர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள். பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருக்கும் வீட்டின் உரிமையாளரான முதியவரான பெண் அழைத்துவரப்பட்டு கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தை தோண்டும் நடவடிக்கை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு தேடும் நடவடிக்கை மாலை 5 மணி வரை சுமார் 8 மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டும் நடவடிக்கையை நிறுத்தி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தோண்டப்பட்ட பகுதியை மீண்டும் மூடிக் கொண்டனர்.

அதிரடி வேட்டை: அதிரடி வேட்டை: வேனில் மறைத்து கடத்தப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான 'Monster' பைக் சிக்கியது!  


இலங்கை பொலிஸாரின் விசேட அதிரடி சோதனையில், சட்டவிரோதமான முறையில் பாகங்களாகக் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள் ஒன்று சிக்கியுள்ளது! 

நடந்தது என்ன? 

நேற்றிரவு (12) முதல் இன்று (13) அதிகாலை வரை பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு சந்தேகத்திற்குரிய வேன் சோதனையிடப்பட்டது.

 🚐 மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 1000 CC திறன் கொண்ட பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது! 

பணத்தாசை காட்டிய கடத்தல்காரர்கள்! 

கொழும்பிலிருந்து நொச்சியாகம நோக்கி இந்த மோட்டார் சைக்கிளைக் கொண்டு செல்ல முயன்ற 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பொலிஸாரிடம் சிக்கியவுடன், அங்கிருந்து தப்பிப்பதற்காக 70,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளனர். 

பொலிஸாரின் நேர்மை! 

கடத்தல்காரர்களின் இலஞ்ச ஆசையைத் தூக்கியெறிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடத்தப்பட்ட வாகனம் மற்றும் சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர். ⚖️

சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது! 


இலங்கை பொலிஸாரின் விசேட அதிரடி சோதனையில், சட்டவிரோதமான முறையில் பாகங்களாகக் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள் ஒன்று சிக்கியுள்ளது! 

நடந்தது என்ன? 

நேற்றிரவு (12) முதல் இன்று (13) அதிகாலை வரை பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு சந்தேகத்திற்குரிய வேன் சோதனையிடப்பட்டது.

 🚐 மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 1000 CC திறன் கொண்ட பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது! 

பணத்தாசை காட்டிய கடத்தல்காரர்கள்! 

கொழும்பிலிருந்து நொச்சியாகம நோக்கி இந்த மோட்டார் சைக்கிளைக் கொண்டு செல்ல முயன்ற 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பொலிஸாரிடம் சிக்கியவுடன், அங்கிருந்து தப்பிப்பதற்காக 70,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளனர். 

பொலிஸாரின் நேர்மை! 

கடத்தல்காரர்களின் இலஞ்ச ஆசையைத் தூக்கியெறிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடத்தப்பட்ட வாகனம் மற்றும் சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர். ⚖️

சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளனர்.


நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். 

 


கொழும்பு மாநகர சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை


சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் 105 கசிப்பு போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது!


மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நீண்டகாலமாகப் பெரும் அளவில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை, 105 போத்தல் கசிப்புடன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று புதன்கிழமை (08) மாலை கைது செய்துள்ளனர்.


கல்லடி, வேலூர் 4 ஆம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள குறித்த சந்தேகநபரின் வீடு, மிகவும் உயரமான மதில்களால் சூழப்பட்டிருந்ததுடன், வீட்டைச் சுற்றிலும் அதிநவீன கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.


பொலிஸார் சுற்றிவளைப்புக்கு வரும்போது, அந்த ஒளிப்படக்கருவிகள் ஊடாக அதனை அவதானிக்கும் இப்பெண், வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு உள்ளே யாரும் இல்லாதது போன்ற பாவனையில் நீண்டகாலமாகத் தப்பித்து வந்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின் கீழ், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் விசேட குழுவினர் இம்முற்றுகையை மேற்கொண்டனர்.


பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையிலான குழுவினர், குறித்த வீட்டைத் தந்திரமான முறையில் சுற்றிவளைத்துச் சோதனையிட்டபோதே, 105 போத்தல் கசிப்புடன் இப்பெண் பிடிபட்டார்.


குறித்த பெண்ணின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை முன்வைத்து வந்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள இவ்வீட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சட்டவிரோத வியாபாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்


 விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் புதன்கிழமை(8) மாலை இடம்பெற்றதுடன் குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் பயன்படுத்திய பல வீடுகளில் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்   D.C.D.B என அழைக்கப்படும்   அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு   பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிற்கு   கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது 43 வயது மதிக்கத்தக்க தோடம்பழம் சுயேட்சைக் குழுவின்  காரைதீவு பிரதேச சபை முன்னாள்  உறுப்பிராக செயற்பட்டவர்    சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருந்ததுடன்  குறித்த கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும்   மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலத்திரனியல் தராசு 2 கைத்தொலைபேசிகள் ஒரு தொகை பணம் கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக    கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்   ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.


மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்  1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில்  அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  கே.ஏ.எம்.பிரியங்கர  தலைமையிலான குழுவினரால்   இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கைதான சந்தேக நபர் இன்று (09) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை   பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்து முழங்காலில் இரண்டு மணித்தியாலம் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதாக இன்று (09) மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்தார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) காலையில் செட்டிபாளையம் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் அனுமதியற்ற மீன்பிடி வலைக்கு பாவிக்கும் ஈயம் துண்டுகளை வைத்து கொண்டிருந்தபோது அங்கு சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமில் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சென்று குறித்த மீனவரை கைது செய்தனர்


இதன்போது மீனவர் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலையை பாவித்து மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் குறித்த மீனவரை பிடித்து இரண்டு மணித்தியாலம் முழங்காலில் இருக்க வைத்து அடித்து தாக்கியுள்ளனர். 


இதன்போது அவர் நான் ஒரு சர்க்கரை வியாதி நோயாளி அதற்கான குளிசையை போடுவதற்கு விடுமாறு கோரியும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்காது அவரை முழங்காலில் வைத்துக் கொண்டனர்.  


இதனை அறிந்த அவரது மனைவி தனது கணவரை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதை செய்வதைக் கண்டு, உடன் அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவை செய்து கொண்டதை கண்ட கடற்படை புலனாய்வு பிரிவினர் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை பறித்து அவர் வீடியோ செய்த காட்சிளை அழித்ததுடன் அவருக்கு தகாதவர்த்தைகளால் பேசி அவரை கைது செய்யப் போவதாக மிரட்டி அவரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். 


இதனை தொடர்ந்து முழங்காலில் வைத்திருந்த மீனவரை களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்திருந்த பின்னர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் காரியாலய அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.


இதனை தொடர்ந்து கடற்படை புலனாய்வு பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் மிகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை முழங்காலில் வைத்திருந்த காட்சியை தனது பிள்ளைகள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்திருந்ததாகவும் அதனால் மிகவும் வேதனையடைந்துள்ளதுடன் அவமானம் ஏற்பட்டுள்ளதுடன் பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நான் மட்டும் இந்த சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கவில்லை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சுருக்குவலையை பாவித்து மீன்பிடித்து வருகின்ற நிலையில் என்னை மட்டும் கைது செய்தது மட்டுமல்ல முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவரை செய்துள்ளனர் எனக்கு நீதி வேண்டும் சம்மந்தப்பட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.