Showing posts with label Culture. Show all posts

 


கிழக்கு பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா


கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  தைப்பொங்கல் தின விழா கோலாகலமாக நடைபெற்ற போது...

 


அம்பாறை மாவட்ட இலக்கிய விழாவில் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் இளம் கவிஞர் மனோகரன் சசிப்பிரியன்( விபுலசசி) அவர்களுக்கு கலைஞர் சுவதம் விருதினை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம வழங்கி வைத்த போது ..


  அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் தைப்பொங்கல் நிகழ்வு கல்லூரி பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணிமூர்த்தி தலைமையில் நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்ற போது....


படங்கள்  வி.ரி. சகாதேவராஜா

 


பிரபல தென்னிந்திய பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி சற்று முன்னர் மாரடைப்பால் காலமானார்.


இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.

 


உலக தமிழ்ச் சங்க இலக்கிய விருதைப் பெற்ற  காரைதீவு கனடா பேராசிரியர் பாலசுந்தரத்திற்கு கனடாவில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.



இந்தியா தமிழகத்தில் இடம் பெற்ற அயலகத் திருவிழாவில் பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் எழுத்துலகில் ஆற்றிய தமிழியலுக்கான விருதினையும் பாராட்டினையும் வழங்கி மதிப்பளித்ததனை வரவேற்கும் நோக்குடன்  
கனடா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரும் பாராட்டு விழா நடைபெற்றது.

பல்கலைக்கழக
 மாணவர்கள், விரிவுரையாளர்கள் ,ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து நேற்றுமுன்தினம் கனடா அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்டபத்தில் பேராசிரியர் இ.பாலசுந்தரத்திற்கான வரவேற்பும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டன.

அதேவேளை,உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது இம்முறை கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரத்திற்கு கிடைத்திருக்கின்றது.

 இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மதுரையில் இடம் பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்தார்.

 பேராசிரியர் பாலசுந்தரத்துக்கு இந்த விருதோடு இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் பணமும் பொன்னாடையும் வழங்கப்பட்டது.

17 தகுதியான நூல்களையும் 64 ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டு இருந்தார் காரைதீவைச் சேர்ந்த இளையதம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வரான இவர்
தமிழ் இலக்கியத்தில் முதுதத்துவமானி பட்டம் பெற்று யாழ்ப்பாணம் கொழும்பு லண்டன் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக இருந்து பேராசிரியர் ஆனார்.

சாஹித்திய மண்டல விருது இலக்கிய விருது வாழ்நாள் சாதனையாளர் விருது என்று பல விருதுகளை பெற்றவர்.

 இவரது இலக்கியப் பணியை சிறப்பித்து மதுரை உலக தமிழ்ச் சங்கத்தினர் இந்த விருதை வழங்கி வைத்தனர்

 பேராசிய பாலசுந்தரம் தமிழ் துறையில் பேராசிரியராக கனடா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்சமயம் இணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.


விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா

 


.(சுகிர்தகுமார்) 0777113659  


 கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமையப்பெற்ற  கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகர் குல சங்கமன் எனும் சிற்றரசனால் நிர்மாணிக்கப்பட்ட பண்டைய வரலாற்றுத் தொன்மை மிக்க திருக்கோவில் பிரதே செயலகத்திற்குட்பட்ட தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நடும் நிகழ்வானது இன்று(24) காலை சுபநேரத்தில் இறை ஆசியுடன் இடம்பெற்றது.
சிவபூமியாம் என திருமூலரால் போற்றப்பட்டு வரும் இலங்காபுரியில் பஞ்பூதங்களின் ஆசீர் வாதத்துடன் திகழும் இவ்ஆலயத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு பக்தர்களின் அரோகரா கோஷங்களுடனான வேண்டுதலுக்கு மத்தியில் காலை 9.40 முதல் 10.50 வரையான சுப வேளையில் சாம ஸ்ரீP தேசமான்ய சிவாச்சாரியார் திலகம் அகோர சிவாச்சாரியார் சிவப்பிரம்ம ஸ்ரீP சி.கு.கணேஸ்சமூர்த்திஸ்வர குருக்கள் தலைமையிலான குருமார்களின் வேதமந்திரங்களுடன் ஆரம்பமானது.
ஆலய நிர்;வாக சபையின் தலைவர் த.முருகானந்தராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆலய செயலாளர் வா.குணாளன் பொருளாளர் லிங்கநாதன் மற்றும் பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோத்தர் நிஷாந்தினி இந்து அமைப்புக்களின் தலைவர்கள் ஆலய தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் யாக பூஜை இடம்பெற்றதுடன் ஆலயத்தலைவரினால் பிரதான அடிகல் எடுத்துச் செல்லப்பட்டு சிவப்பிரம்ம ஸ்ரீ சி.கு.கணேஸ்சமூர்த்திஸ்வர குருக்கள் அவர்களினால் நடப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைவரும் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்வின் ஆசி உரையினை சாம ஸ்ரீ தேசகீர்த்தி ஈசான  சிவாச்சாரியார் சிவப்பிரம்ம ஸ்ரீ .கணேச திவிசாந்த குருக்கள் வழங்கியதுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.
மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பழமையான ஆலயம் சிதைவடைந்ததன் காரணமாகவே நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்கு உள்நாட்டு வெளிநாட்டு உறவுகள் கைகொடுத்து உதவ முன்வரவேண்டும் எனவும் செயலாளர் வா.குணாளன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 


(எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்கான்)


3 வது சர்வதேச முஸ்லிம் சாரணர் ஜம்போறி 2024 ஆம் வருடம்   ஜூன்  30 ம் திகதி தொடக்கம் ஜூலை 6ம் திகதிவரை அமெரிக்காவிலுள்ள ரெக்ஸாஸ் மாநிலத்தின் ஹவுஸ்டன் நகரில் பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச ஊடக மையத்தின் அங்கத்தவர்களுக்கான இணையவழி பாராட்டு நிகழ்வு கடந்த 13.01.2024 சனிக்கிழமை நடைபெற்றது.
இம்மையத்தின் தலைவராக பங்களாதேஷைச் சேர்ந்த செய்யட் முஹம்மத் எஹ்திஸாம் நக்வி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக டாக்டர் ஆயில் அப்துல்மஜீட், பொப் வெடிக், பிரேய் பர்னிஸ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இம்மையத்தில் சர்வதேச ரீதியாக மொத்தம் 37 பேர் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனர். இதில்  இலங்கை சார்பாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய உப தலைவர், ஒய்வு பெற்ற உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் தெரிவு  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 அம்பாறை மாவட்ட இலக்கிய விழாவில் தம்பிலுவில்  திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் ஓய்வு நிலை கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் கண்.இராஜரெத்தினம்(

கண்ணன்) அவர்களுக்கு கலைஞர் சுவதம் விருதினை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம வழங்கி வைத்த போது ..

 (சுகிர்தகுமார்) 0777113659 



 அம்பாரை மாவட்டம் விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையிலான மாபெரும் பட்டத்திருவிழா வரலாற்றில் முதல் தடவையாக மிக பிரமாண்டமான முறையில் நேற்று (15) மாலை விநாயகபுரம் கடற்கரை முற்ற வெளியில் இடம்பெற்றது.
வலம்புரியோன் அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் தலைமையில் விநாயபகபுரம் முத்துலெட்சுமி நகையகத்தின் உரிமையாளர் சி.சஞ்ஜீவனின் முழுதான அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் குருமார்கள் மற்றும் வங்கி முகாமையாளர்கள் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பட்டம் விடும் போட்டி ஆண்களுக்கான கயிறுழுத்தல் பெண்களுக்கான சங்கீதக்கதிரை மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.
பட்டத்திருவிழா கலந்து கொண்ட அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இதில் அதிகளாவனவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு; வண்ணமயம் மிக்க வித்தியாசமான பட்டங்களை வானில் பறக்கவிட்டதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
இதேநேரம் இன்னிசை நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் உள்ளுர் வெளியூர் கலைஞர்களும் பங்கேற்று பல பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்சிப்படுத்தினர்.
கயிறு இழுத்தல் போட்டி மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கான போட்டிகளும் இடம்பெற்றது.
பட்டம் விடும் போட்டியில் கலந்து கொண்ட முதலிடம் பெற்றவருக்கு 30ஆயிரமும் இரண்டாம் இடம் பெற்றவருக்கு 20ஆயிரமும் மூன்றாம் இடம்பெற்றவருக்கு 10 ஆயிரமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் 7 ஆறுதல் பரிசில்களும் ஏனைய போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக நிகழ்விற்கு பூரண அனுசரணை வழங்கிய சஞ்சீவன் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இன்னும் சிலர் பாராட்டப்பட்டனர்.  


 ( வி.ரி. சகாதேவராஜா)

 தைப்பொங்கலையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட பூஜையும் செப்பு பூஜையும் இன்று(15) திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆலய கப்புகனார் வழமைபோல பாரம்பரிய செப்பு பூஜையை நடத்தி வைத்தார்கள்.

 புதுவஸ்திரத்துடன் மக்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர்.

 


ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய www.ceylon24.com குழுமம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

 



நூருல் ஹுதா உமர்  

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா 2023 மற்றும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் விழா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். ரிம்ஸான் அவர்களின் நெறிப்படுத்தலில் அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் அட்டாளைச்சேனை தனியார் மண்டபத்தில் இன்று (09) நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட நீதவான் கெளரவ எம்.எச்.எம். ஹம்ஸா, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ டி.கருணாகரன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம். அன்ஸார், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, அம்பாறை மாவட்ட உதவி செயலாளர் டவலியு.வி. செனவிரத்ன, கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ், பிரதேச செயலகங்களின் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், சிரேஷ்ட கலைஞர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ், முஸ்லிம் மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகள் எல்லோரையும் கவரும் வகையில் இங்கு அரங்கேற்றப்பட்டதோடு, அம்பாறை மாவட்டத்தில் கலாச்சார நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் சுவதம் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


( வி.ரி.சகாதேவராஜா)

மறைந்த பிரபல நடிகரும் தமிழ் உணர்வாளருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்திற்கு காரைதீவில் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெறவுள்ளது.


 இலங்கை தமிழரசுக் கட்சியின்  காரைதீவுக்கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு பொது நூலக மண்டபத்தில் இடம்பெற உள்ளது .

தாயகமக்களின் கதாநாயகனும் ஈழ தேசத்தின் விடுதலைக்காக அளப்பெரிய சேவைகளை வழங்கிய கொடை வள்ளலுமான விஜயகாந்த் அவர்களுடைய ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று ஏற்பாட்டாளர் முன்னாள் தவிசாளர்
 கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)

உலக தமிழர்களின் இதயங்களில் வாழ்ந்த  உன்னத கலைஞன் விஜய்காந்த் ஆவார்.

இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் காரைதீவு தலைவரும்  காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் முதல்வர்  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மறைந்த நடிகர் விஜய்காந்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அஞ்சலி அறிக்கை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..
 கெப்டன் விஜயகாந்த்  தாயக மக்களின் விடுதலைக்காக ஈழ தேசத்தில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு   பலஉதவிகள் புரிந்தவர்.

உலக தமிழர்களின் இதயங்களில் வாழ்ந்த  உன்னத கலைஞன்  வாரி வழங்கும் வள்ளல் பாமர மக்களையும் திரையுலகிற்கு கொண்டு வந்தவர் தமிழரின் வரலாறுகளையும் வடகிழக்கு தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தையும் திரைப்படங்கள் ஊடாக உலகத்திற்கே ஈழத் தமிழர்களின் அபால நிலையை எடுத்துக்காட்டியவர் தேசத்தின் மீது பற்றோடு பல தாயக மக்களினுடைய கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம் உங்களுடைய ஆத்மா சாந்தியடைய தாயக மக்கள் சார்பாக இறைவனை பிரார்த்திக்கின்றேன் .


 (வி.ரி.சகாதேவராஜா)


 இராமகிருஷ்ண மிஷன் தன்னுடைய புதிய சேவை நிலையத்தை  நுவரெலிய மாவட்டம் கொட்டகலையில்  அமைத்து வருகிறது. 

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் இரத்தினபுரிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்து  100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்று இந்து தர்மத்தின் வழிபாட்டு முறைகளை விரிவாக எடுத்துரைத்து சொற்பொழிவாற்றினார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள  கரபிஞ்ச  கிராமத்தில் அபிராமி அறநெறி பாடசாலையை  திரை நீக்கம் செய்து தொடங்கி வைத்ததோடு அங்குள்ள கிராம மக்களுக்கு தர்மத்தின் வழியில் வாழ்தல் என்னும் தொனி பொருளில் உரையாற்றினார்.

 இரத்தினபுரி மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ ரத்தினபுரீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்து ஸ்வயம் சேவக குழுவினரின் பெண்களுக்கான முகாமில் கலந்து கொண்டு, யுவதிகளை சமுதாயத்தின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது என்ற பொருளில் உரையாற்றினார்.
.

 


ஜப்பான் நாட்டில் நடைபெற்ற அல் குர்ஆன் மனன போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் மாணவர்கள் இருவர் இறுதி சுற்றுக்கு தெரிவு.

--------------------------------------------------------------------------

அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியில் அல் குர்ஆனை ஒன்லைன் ஊடாக கற்று வந்த ஜப்பான் நாட்டில் வசிக்கும் இரண்டு மாணவர்கள் அங்கு நடைபெற்ற அல் குர்ஆன் மனன போட்டியில் தெரிவு செய்யப்பட்டு இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ் 


சாய்ந்தமருதை சேர்ந்த பொறியியலாளர் Uwais அவர்களின் புதல்வரும் புதல்வியுமான Uwais Mohamed Aabidh Rushdi மற்றும் Uwais Thahleela Thahaani ஆகியோர்களே தெரிவு செய்ய்யப்பட்டு எதிர்வரும் 31ம் திகதி Tokyo நகரில் நடைபெறவுள்ள இறுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.


மேற்படி எமது அஷ்பால் அகடமி மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு ஒன்லைன் மூலமாக பயிற்றுவித்த எமது அகடமின் உஸ்தாத் மார்களான அல் ஹாபிள் Dr M. I. M. Siddeek, அல் ஹாபிழ் B. M. Fasmeer,  அல் காரி அல் ஹாபிழ் M. H. M. Sajjaath மற்றும் அல் ஹாபிள் Rinosan ஆகியோர்களுக்கும் அஷ்பால் வின்னேர்ஸ் அகடமி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.


மேற்படி இரண்டு மாணவர்களும் இறுதி சுற்றிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கின்றோம்.


எமது பிராந்தியத்தில் இருந்து வெளிநாடு சென்று அங்கு வசித்து வருகின்ற பல மாணவர்களுக்கு அஷ்பால் அகடமி Online மூலமாக அல் குர்ஆனை பயிற்றுவித்து இவ்வாறான சர்வதேச நிகழ்வுகளில் வெற்றி ஈட்டக்கூடிய பல மாணவர்களை உருவாக்கி வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


 சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் 19வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்,நாபீர் பொண்டேஷனின் சம்மாந்துறை தலைமை காரியாலயத்தில்(26)இன்று இடம்பெற்றது.

பிரபல சமூக சேவையாளரும்,தொழிலதிபரும்,
நாபீர் பொண்டேஷன் ஸ்தாபகரும்,பொறியியலாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் வழிகாட்டலில்,சுனாமி அனர்த்தத்தினால் மரணித்த உறவுகளுக்கான கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு கண்ணியத்துக்குரிய உலமாக்களினால் நடத்தப்பட்டது. 

 துஆ பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவுகளை - கல்முனை தாருஸ்ஸபா அமையத்தின் ஸ்தாபகத் தலைவர் மெளலவி அல்ஹாஜ் சபா முஹம்மது நஜாஹி முகத்தமுல் காதிரி அவர்கள் நிகழ்த்தினார். 


இந்த நிகழ்வினை‌‌ இ.சி.எம்.(ECM) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீட் தலைமை தாங்கி நடத்தியதோடு நாபீர் பௌண்டேஷன் உறுப்பினர்கள்,இ.சி.எம்(ECM)நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 நிகழ்வை தொகுபினை அறிவிப்பாளர் எஸ்.டி ரோஷன் அஷ்ரப் அவர்களும் நன்றியுரையினை அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம் வழங்கினர்.


 மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஜனாஸா சங்க ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின இரு நிகழ்வுகள் !


நூருல் ஹுதா உமர்


சுனாமி பேரலையில் நூற்றுக்கணக்கானவர்களை இழந்த அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் சுனாமிப் பேரலை நினைவு தின துஆ பிராத்தனையும், குர்ஆன் தமாம் செய்தலும், நினைவுரையும் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஜும்மா பள்ளிசாலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) மாலை இடம்பெறவுள்ளது டன் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க ஏற்பாட்டில் ஜனாஸா சங்க வளாகத்தில் அன்று காலை சுனாமி நினைவு தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.


அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமாகும் ஜும்மா பள்ளிவாசலின் இந்நிகழ்வு மஹரீப் தொழுகை வரை இடம்பெறவுள்ளதுடன் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க ஏற்பாட்டில் ஜனாஸா சங்க வளாகத்தில் அன்று காலை இடம்பெறவுள்ள நிகழ்விலும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமாக்கள், பிரதேச செயலாளர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், ஊர்மக்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளதுடன் சுனாமிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட உள்ளதுடன், துஆ பிராத்தனையும் சுனாமி தொடர்பிலான நினைவுரையும் இடம்பெறவுள்ளது.


கடந்த 2004 ஆம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமிப்பேரலையில் மாளிகைக்காடு கடற்கரையை அண்டியதாக அமைந்திருந்த கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயம் மற்றும் மதரஸத்துல் இர்ஸாதியாவில் கல்விகற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் மரணித்ததுடன் குறித்த கல்வி நிலையங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டது மற்றுமின்றி பல நூற்றுக்கணக்கானோர் மரணித்ததுடன் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.