Showing posts with label Daily Information. Show all posts

அக்டோபர் முதல் தேதியன்று இரவு தூங்கச் சென்ற சரவணன் குடும்பத்தினர், அடுத்த நாள் காலையில் கண் விழிக்கவேயில்லை. காரணம்? ஏ.சி…
சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்த சரவணனின் வீட்டின் கதவு, விடிந்து வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் அண்டை வீட்டார் சந்தேகத்தின் பேரின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சரவணன், அவரது மனைவி, எட்டு வயது மகன் கார்த்திக் என மூவரின் சடலங்கள்தான் இருந்தன.
ஏ.சியில் இருந்து நச்சுவாயு கசிந்ததே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
இரவு உறங்க சென்றபோது, மின்சாரம் தடைபட்டதால், ஜெனரேட்டர் மூலம் குளிர்சாதனத்தை இயக்கிவிட்டு படுக்கைக்கு சென்றிருக்கின்றார் சரவணன். பிறகு மின்சாரம் வந்துவிட்டது, ஆனால் ஏ.சியில் இருந்து நச்சு வாயு கசிந்ததால் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே மூவரின் மரணமும் நிகழ்ந்துள்ளது.
இது மிகவும் வருத்தத்திற்குரிய, எதிர்பாராத சம்பவம் என்றாலும், ஏ.சியில் வாயு கசிந்ததால் ஏற்பட்ட முதல் சம்பவம் இது என்று கூறிவிடமுடியாது. கம்ப்ரஸர் வெடித்து மரணம் நிகழ்ந்ததையும், அலுவலகத்திலும், வீடுகளிலும் இருக்கும் அனைவருக்கும் ஒன்றுபோல ஒரே நேரத்தில் தலைவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவங்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
வெப்பத்தை தணித்து, தன்மையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தும் ஏ.சியே உயிரை எடுக்கும் இயந்திரமாக மாறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது, அதுவும் தற்போது ஏ.சி என்பது ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து மாறியிருக்கிறது.
அதோடு, வீடுகளில் இல்லாவிட்டாலும், வெளியிடங்களில், கடைகளில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் என மக்கள் அதிகமாக புழங்கும் பெரும்பாலான இடங்களில் ஏ.சியின் குளுமையை அனுபவிக்காதவர்களின் எண்ணிக்கை சொற்பம் என்ற அளவுக்கு சுருங்கிவிட்டது.
எனவே, ஏ.சியில் இருந்து நச்சு வாயு வெளியேறுவது ஏன், வாயு கசிவதை எப்படி தெரிந்துக் கொள்வது, அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்.
ஏ.சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
.சி உடல் நலத்திற்கு தீங்காவது எப்போது?
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Science and Environment Center (CSE)), திட்ட மேலாளர், அவிகல் சோம்வம்ஷியிடம், பிபிசி குழுவினர் இதுபற்றி பேசினார்கள்.
"நவீன ஏ.சி இயந்திரங்களில் முன்பு இருந்ததை விட இப்போது குறைவான நச்சு வாயுக்களே பயன்படுத்தப்படுகிறது. இவை R-290 ரக வாயு ஆகும், இது தவிர பல்வேறு விதமான வாயுக்களும் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு, குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள் பயன்படுத்தப்பட்டன. இது ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. 15 ஆண்டுகளில் இந்த வாயு உபயோகத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ க்ளோரோ-ஃப்ளோரோ கார்பன் பின்னர் பயன்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் பயன்படுத்தப்படுவதில்லை" என்கிறார் அவிகல் சோம்வம்ஷி.
உங்கள் வீட்டில் உள்ள ஏ.சியில் என்ன வாயு இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? அதற்கான விடையையும் பகர்கிறார் சோம்வம்ஷி.
"தற்போது இந்தியாவில் ஏ.சியில் எரிவாயு ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் வாயுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், சில நிறுவனங்கள் தூய்மையான ஹைட்ரோகார்பனை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. தூய்மையான ஹைட்ரோகார்பன், பிற வாயுக்களைவிட சிறந்ததாக இருப்பதால், அதை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. இதைத் தவிர, இயற்கையான வாயுக்களையும் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்கிறார் அவர்.
டெல்லி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் கெளஷலிடம் இதுபற்றி பேசினோம். 'குளோரோ ஃப்ளோரோ நம் உடலில் நேரடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றபோதிலும், அவை கசிந்து இயற்கையாக இருக்கும் வாயுக்களோடு கலந்து தீங்கு விளைவிக்கும்' என்கிறார் கெளஷல்.
ஏ.சியில் இருந்து வெளியேறும் காற்று தலைவலியை ஏற்படுத்தலாம், ஆனால் மரணத்திற்கான காரணமாக மாறும் வாய்ப்புகள் குறைவே என்று CSE கூறுகிறது.
ஏ.சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஏ.சியில் பயன்படுத்தப்படும் வாயு துர்நாற்றமோ, வித்தியாசமான மணமோ கொண்டதல்ல என்பதால், உங்கள் வீட்டு ஏ.சியில் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிவது சற்று கடினமானதே. ஆனால், சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், ஏ.சியில் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
  • ஏ.சி சரியாக பொருத்தப்படவில்லை என்றால்
  • வாயு செல்லும் குழாயில் அடைப்போ, வளைவோ இருந்தால்
  • பழைய ஏ.சியின் குழாயில் துருப்பிடித்திருந்தால்
  • ஏ.சி வழக்கமான குளிர்வுத்தன்மையை கொடுக்காவிட்டால்
ஏ.சிபடத்தின் காப்புரிமைWALMART
வீட்டில் ஏ.சி இருந்தால் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்
  • முறையாக ஏ.சியை சர்வீஸ் செய்யவும்
  • நம்பிக்கைக்குரிய, தரமான மெக்கானிக்கிடம் ஏ.சி சர்வீஸ் செய்யவும்
  • விண்டோ ஏ.சியைவிட ஸ்பிளி ஏ.சி சிறந்த்து
  • வாயுவின் தரத்தில் கவனம் செலுத்தவும்
  • தவறான வாயுவை ஏ.சியில் நிரப்பினாலும் ஆபத்து ஏற்படலாம்
ஏ.சி பயன்படுத்தும்போது கதவு சன்னல்களை மூடி வைத்திருக்கவேண்டியிருக்கும். இருந்தாலும், தினசரி சிறிது நேரமாவது கதவு, சன்னல்களை திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
"அறையின் சன்னல்கள் அல்லது கதவுகளைத் திறக்கும்போது ஏ.சியை நிறுத்த மறக்கவேண்டாம். இல்லாவிட்டால் உங்களது மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கும். காலையில் ஏ.சியை நிறுத்திய பிறகே, சன்னல் மற்றும் கதவுகளை திறக்கவும்" என்கிறார் சோம்வம்ஷி.
ஏ.சிபடத்தின் காப்புரிமைEPA

ஏ.சியின் தட்பநிலையை எந்த டிகிரியில் வைக்கலாம்?

படுக்கையில் படுத்துக்கொண்டோ, சோபாவில் உட்கார்ந்திருக்கும்போதோ ஏ.சி ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு தட்பநிலையை 16 டிகிரி அல்லது 18 டிகிரியாக மாற்றும் விளையாட்டில் ஈடுபடுபவரா?
அது உங்கள் உடல்நலத்தை பாதிக்கலாம், கையையும் கடிக்கலாம் என்கிறார் சோம்வம்ஷி.
வீடோ, அலுவலகமோ 25-26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வைப்பது நல்லது. பகலைவிட இரவு நேரத்தில் தட்பநிலையை குறைவாகவே வைக்கலாம். இதுபோன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் மின்சார கட்டணம் கையைக் கடிக்காது, தலைவலியும், உடல் சோர்வும் ஏற்படாது.
அதுமட்டுமல்ல, முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு திறன் பலவீனமாக இருக்கும் என்பதை கவனத்தில் வைத்து, அவர்கள் இருக்கும்போது, ஏ.சியின் தட்ப நிலையை அதிகரிக்கலாம்.
ஏ.சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
நாளொன்றுக்கு எத்தனை மணி நேரம் .சியை பயன்படுத்தலாம்?
ஏ.சி எத்தனை மணி நேரம் பயன்படுத்தலாம்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் CSEயின் திட்ட மேலாளர் அவிகல் சோம்வம்ஷி, "வெளிவெப்பம் நேரடியாக உள்ளே வராதது போல் உங்கள் வீடு அமைந்திருந்தால், அறை குளுமையாகும் வரை ஏ.சியை இயக்கிவிட்டு, பிறகு அதை அணைத்துவிடலாம். ஏ.சியிலேயே 24 மணிநேரமும் இருப்பது என்பது ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். நாம் இருக்கும் அறை எப்போதுமே மூடியிருந்தால், குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு, அறைக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். வெளிக்காற்று அறைக்குள் வருவது அவசியம்" என்று சொல்கிறார்.
சன்னல்களும், காற்று வருவதற்கான வாய்ப்புகள் கொண்ட இடங்களில் மட்டுமா ஏ.சி பயன்படுத்தப்படுகிறது? கண்ணாடிச் சுவர்களை கொண்ட, சன்னல்களே இல்லாத, கழிவறைகள் உட்பட எல்லா இடங்களும் முழுமையான குளிர்வூட்டப்பட்ட பெரிய கட்டடங்களிலும், அலுவலகங்களிலும் ஏ.சி இருக்கிறது. உங்கள் அலுவலகத்தில் முழுமையான ஏ.சி செய்யப்பட்டிருந்தால், பல முறை நடுக்கம் ஏற்படுத்தும் குளிரையும் உணர்ந்திருக்கிறீர்களா? சில அலுவலகங்களில் ஏ.சியை எந்த அளவில் வைப்பது தொடர்பான சர்ச்சைகளையும் காணலாம்.
ஏ.சிபடத்தின் காப்புரிமைBBC/KIRTISH

அலுவலகங்களில் ஏ.சியின் தட்பம் குறைவாக வைக்கப்படுவது ஏன்?

அலுவலகத்தில் வழக்கத்தைவிட குறைவாகவே ஏ.சியின் தட்பநிலை வைக்கப்படுவதை சுட்டிக்காட்டும் சோம்வம்ஷி, ''இது வெளிநாட்டில் இருந்து நாம் பெற்ற மனோபாவம். குளிர் பிரதேசங்களில் வசிக்கும் அவர்களுக்கு அதிக குளிர் உகந்ததாக இருக்கலாம். ஆனால் வெப்ப மண்டல நாடான இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அதிக அளவிலான குளிர் தேவையில்லை, வேர்த்துப் போகாத உடலுக்கு ஏற்ற தட்பம் இருந்தால் போதும். அதிக குளுமை, உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். தும்மல் வரும், தலைவலி வரும். அலுவலகங்களிலும் ஏ.சியின் அளவை போதுமான அளவு பராமரித்தால், பணியின் தரமும் மேம்படும், மின்சார கட்டணமும் குறையும்.''
அலுவலகங்களில் தட்பத்தை அதிகமாக வைப்பதற்கு காரணம் மனிதர்கள் மட்டுமல்ல, இயந்திரங்களின் பாதுகாக்கவும்தான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் சோம்வம்ஷி. தொடர்ந்து பல மணி நேரங்கள் இயங்கும் இயந்திரங்களால் வெப்பம் அதிக அளவில் வெளியாகும் என்பது ஒருபுறம், அதிக வெப்பத்தால் இயந்திரங்கள் விரைவில் பழுதடையாமல் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஒரு காரணம் என்கிறார் அவர்.
ஓசோன் படலம்படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY
Image captionஓசோன் படலம்
முற்றிலும் ஏ.சி செய்யப்பட்ட அலுவலகங்களில் காற்றோட்டம் முற்றிலுமாக தடைபட்டால் அதை, 'sick building syndrome' என வெளிநாட்டினர் குறிப்பிடுவார்கள் என்பதையும் நினைவூட்டுகிறார் சோம்வம்ஷி.
பெரிய அலுவலகங்களில் மையப்படுத்தப்பட்ட ஏ.சி (centralised Air conditioning system) பொருத்தப்பட்டுள்ளது, அதன் மூலமாக காற்று வரும்.
அலுவலகத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது அங்கும் இங்கும் சென்று வருவதால் அவர்களுக்கு வெளிக்காற்று கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மையப்படுத்தப்பட்ட ஏ.சி இருக்கும் அலுவலகங்களில், அவை அவ்வப்போது சுத்தப்படுத்தப்படுகிறதா, சர்வீஸ் செய்யப்படுகிறதா என்று தெரிந்துக் கொள்ளவேண்டும் என CSE அறிவுறுத்துகிறது. ஏனெனில் காற்று வரும் வழியில் குப்பையோ, எதாவது தடைகளோ ஏற்பட்டால், அப்போது குளிர் காற்று உங்களுக்கு விளைவிக்கும் தீங்கின் அளவு அதிகரிக்கும்.

ஏ.சியின் தட்ப டிகிரியை தீர்மானிக்கும் அரசுகள்

24 டிகிரி செல்சியஸில் ஏ.சி இயக்கப்பட்டால், போதுமானது, அது மின்சாரக் கட்டணத்தை சேமிக்கவும் உகந்தது என்று இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எரிசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியது.
அடுத்த ஆறுமாதங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நட்த்தப்படும் என்றும், பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவிக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் யூனிட் மின்சக்தி சேமிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அரசு கூறுகிறது.
இந்தியாவைப் போன்றே, உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற தட்பநிலையை பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சோம்வம்ஷி கூறுகிறார்.
  • சீனா:26
  • ஜப்பான்: 28
  • ஹாங்காங்: 25.5
  • பிரிட்டன்: 24
இந்தியா போன்ற காலநிலை உள்ள நாட்டில் 26 டிகிரி செல்சியஸில் ஏ.சி செயல்படுவது உகந்தது என்பதே சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புகள் சம்பந்தமாக மறுஆய்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. 

அந்த நடவடிக்கை நிறைவடைவதற்கு ஒரு மாத காலம் எடுக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. 

அதன் பின்னர் இறுதி அறிக்கை எதிர்வரும் மாதம் 25ம் திகதி கையொப்பமிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடு திரும்ப இனி அனுமதி பெற தேவையில்லை எனும் புதிய சட்டத்தை கத்தார் அரசு அமல்படுத்தியது.

கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள், சொந்த காரணங்களுக்காக தங்கள் நாடுகளுக்கு திரும்ப, விசா எளிதில் கிடைக்காது. இந்நடைமுறையில் தற்போது கத்தார் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி கத்தாரை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்கள், இனி அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் இன்று(செப்.,05) அமலுக்கு வந்தது.

கத்தாரின் தோஹா நகரில் 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இச்சட்டம் அமல்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில் 8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார். 

2001 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா.சபையுடன் பகிர்ந்து கொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவுக்கு அருகாமையில் உள்ள பெர்ன் என்னும் இடத்தில் வசித்து வந்தார். 

இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18 ஆம் திகதி தனது 80 ஆவது வயதில் கோபி அன்னான் காலமானார். 

தலைசிறந்த ராஜதந்திரியாகவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13 ஆம் திகதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு ஜனாதிபதி நானா அக்குஃபோ-அடோ அறிவித்துள்ளார். 

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில், நேற்று (23) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் நேற்றிரவு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95.
பன்முக திறமையாளராக அறியப்பட்ட குல்தீப், பஞ்சாப் அருகேயுள்ள சியால்கோட் பகுதியில் 1924 ஆம் ஆண்டு பிறந்தார்.
பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என தடம் பதித்து அனைத்து துறைகளிலும் சிறந்தி விளங்கியவர் குல்தீப்.
அரசியல் தலைவர்கள் பலரும் குல்தீப் நய்யார் குறித்த அஞ்சலி செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் காலமானார்
பிரதமர் நரேந்திர மோதி பதிந்துள்ள அஞ்சலி செய்தியில், "சமகாலத்தில் மிகச்சிறந்த அறிவாளி குல்தீப்" என்று கூறிய அவர், எமெர்ஜென்சிக்கு எதிரான குல்தீப்பின் நிலைப்பாட்டையும் போற்றியுள்ளார்.
பிபிசிக்காக குல்தீப் எழுதிய கட்டுரையை படிக்க:
மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்படத்தின் காப்புரிமைMAMATA BANERJEE
Image captionமேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்
புதுடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாபடத்தின் காப்புரிமைMANISH SISODIA
Image captionபுதுடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இரங்கல்
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்படத்தின் காப்புரிமைPRESIDENT OF INDIA
Image captionஇந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இரங்கல்படத்தின் காப்புரிமைARUN JAITLEY
Image captionமத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இரங்கல்

ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் மாடல்களை செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவற்றில் ஐபோன் 9 மாடல் ஆப்பிளின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என்றும், இதில் ஐபோன் X போன்ற 6.1 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன். ஃபேஸ் ஐடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 11 மற்றும் 11 பிளஸ் மாடல்கள் ஐபோன் X2 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப், 7nm A11 சிப்செட், புத்தம் புதிய யு.எஸ்.பி.-சி சார்ஜர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 2018 ஆப்பிளின் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது. 


ஏற்கனவே வெளியான தகவல்களின் படி 2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும் இந்த அம்சங்கள் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட்9 அம்சங்களை போன்றே இருக்கிறது.

புதிய OLED மாடல்கள் பட்ஜெட் ரக மாடல்களை விட விலை அதிகமாக இருக்கும் என்றும் பட்ஜெட் ரக 6.1 இன்ச் ஐபோன் விலை 699 முதல் 749 டாலர்கள் முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. ஐபோன் X 2018 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களின் விலை முறையே 899 முதல் 949 மற்றும் 999 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிகிறது.

2018 ஐபோன்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் விற்பனை துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உநஉநTechnology/Tec

இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் கைச்சாத்திட்டுள்ளன.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் (SLIDA)) நடைபெற்ற அரச பிரதிநிதிகளுக்கான மாநாட்டின் போது, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன முன்னிலையில்உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரி. கொடிகார மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இலத்திரனியல் ஆவணச் சான்று உறுதிப்படுத்தல் முறைமையை இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களுடன் இணைப்பதானது பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆவணப்படுத்தல் கருமங்களை கொழும்பிலுள்ள கொன்சியூலர் பிரிவுக்கு வருகை தராமல் தமக்கு மிக நெருக்கமான பிரதேச செயலகங்களில் பூர்த்தி செய்து கொள்வதனை சாத்தியப்படுத்தும்.
மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்திற்கு தற்போது வருகைத் தரும் வட மாகாண மக்கள் கூட இந்த பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்திற்கு பதிலாக தமக்கு அருகாமையிலுள்ள பிரதேச செயலகங்களடாக சான்று உறுதிப்படுத்தல் வேலைகளை செய்து கொள்ள முடியுமாக இருக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதனை சாத்தியமாக்கும்.
ஆரம்பமாக காலி மாவட்டத்திலுள்ள 19 பிரதேச செயலகங்களில் ஒரு ஆரம்ப திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து இந்த வசதியை இலங்கையிலுள்ள 332 பிரதேச செயலகங்கள் அனைத்திற்கும் விஸ்தரிப்பதிற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்பத் திட்டத்திற்கு கனடா அரசாங்கம் புலம்பெயர்வுக்கான சர்வதேர அமைப்பினூடாக 6.8 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகளை அன்பளிப்புச் செய்திருக்கின்றது.
கைச்சாத்திடும் வைபவத்தின் போது உரையாற்றிய உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன ; கனடா அரசாங்கத்தினால் ஆரம்ப செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட உபகரணங்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன் அனைத்து மாவட்டங்களிலும் பிரதேச செயலகங்களில் இலத்திரனியல் முறையில் ஆவணங்களை சான்று உறுதிப்படுத்தலை அமுல்படுத்துவதற்கு அவசியமான பங்களிப்பை விஸ்தரிக்குமாறு அனைத்து அரச பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம்; பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறையானது பாரியளவு அந்நிய செலாவனியை நாட்டிற்கு ஈட்டித்தரும். புலம்பெயர் தொழிலாளர்கள் சமூகத்திற்கு வினைத்திறனான முறையில் சேவையாற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி 2 ஆம் தவணைக்கான விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

எனினும் ஹஜ் பெருநாளை கருத்திற் கொண்டு, அந்த விடுமுறை தினத்தை மாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதனடிப்படையில் நாளை (17) முதல் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை 3 ஆம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தபால் மா அதிபராக இருந்த ரோஹண அபேரத்ன ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர முதலாவது பெண் முதல்வர் ரோசி சேனநாயக்க,ஐக்கிய ராச்சியத்தின் ஹரோ நகரின் முதலாவது முஸ்லிம் பெண் மாநகர முதல்வர், கரீமா மரிக்கார் ஆகியோர், கொழும்பில் சந்தித்த வேளையில் சிந்தியவை.

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.