Showing posts with label Disaster. Show all posts

நியூ கலேடோனியா அருகே தெற்கு பசுபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவிகளின் கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் நியூ கலேடோனியா மற்றும் அருகிலுள்ள வனுவாட்டு பகுதிகளை நோக்கி சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வௌியேறுமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹவாயில் உள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூ கலேடோனியாவில் ஆரம்பத்தில் 82 கிலோமீட்டர் (51 மைல்கள்) தொலைவில், கிழக்கில் 10 கிலோமீட்டர் (6 மைல்கள்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஹவாய் நாடுகளின் கடற்பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இது கடந்த 12 மாதங்களில் நடந்த மூன்றாவது பெரிய நிலநடுக்கம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள்.
அளவுகோலில் 7.3-ஆக பதிவாகி உள்ளது.
இரானை சேர்ந்த உதவி நிறுவனம் ஒன்று, 70,000 மக்களுக்கு தங்குமிடம் தேவைப்படுவதாக கூறியுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரான் மேற்கு மாகாணமான கெர்மான்ஷா பகுதியை சேர்ந்தவர்கள்.
அந்தப் பகுதியில் மட்டும் 5,660 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இராக் தலைநகரம் பாக்தாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஈராக்கில் இறந்தவர்கள் ஏழு பேர்.
இந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் தொடர்ந்து பிரார்தனைகளை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிப்பரப்பி வருகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாக்தாத்தில் வசிக்கும், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான மஜிதா அமீர், "நான் என் குழந்தைகளுடன் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அந்தச் சமயத்தில், எங்களுடைய கட்டடம் காற்றில் ஆடத் தொடங்கியது" என்கிறார்.
மேலும், "நான் முதலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு காரணமாக கட்டடம் ஆடுகிறது என்று நினைத்தேன். ஆனால், சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் 'நிலநடுக்கம்' என்று கத்துவதை கேட்டேன்." என்று அப்போது நடந்த காட்சிகளை விளக்குகிறார் அவர்.
ஈரான் - ஈராக் எல்லையின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவசரகால அதிகாரி ஒருவர், ஈரானில் மட்டும் 3,950 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்ததாக இர்னா செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் எல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் சர்பொல்-ஏ-ஜகாப் நகரத்தில்தான் பலர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, இரான் அவசரகால சேவையகத்தின் அதிகாரி பிர் ஹுசைன் கோலிவண்ட் கூறியதாக இரானிய அரசு தொலைக்காட்சி நிறுவனமான இரின்னில் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்கு மத்தியிலும் செய்தி வழங்கிய குர்திஷ் தொலைக்காட்சி.
நகரத்தின் முக்கிய மருத்துவமனை, இந்த நிலநடுக்கத்தால் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனால், காயமடைந்த பல நூறு பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனை சிரமப்படுவதாக, ஈரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.
ஒரு நிமிடத்திற்கு மேலாக:
இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்ததாக, இர்பில்லில் வசிக்கும் பிபிசியின் செய்தியாளர் ரமி ருஹாயெம் கூறுகிறார்.
Dashcam footage captured a truck's near miss with a child in Norway
"முதல் சில நொடிகளுக்கு எங்களால் இது என்ன என்று உணரமுடியவில்லை. இது மிதமான நிலநடுக்கம்தானா அல்லது கனவா...? என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், சிறிது நேரத்தில் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆடத் தொடங்கியது." என்கிறார்.
துருக்கி, இஸ்ரேல், குவைத் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது.

இந்தோனீசியாவில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பல டஜன் பேர் காயமடைந்தனர் என்று பொலீசார் தெரிவித்தனர்.
தலைநகர் ஜகார்த்தாவுக்கு மேற்குப் பகுதியில் தாங்கெராங் என்ற இடத்தில் உள்ள இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு (கிரீன்விச் நேரம் 2 மணி) விபத்து ஏற்பட்டது.
தாங்கள் இன்னும் பாதிக்கப்பட்டோரை வெளியேற்றிக்கொண்டிருப்பதாக தாங்கெராங் கொடா போலீஸ் தலைவர் ஹேரி குர்னியவான் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தொழிற்சாலையில் இருந்து அடர்ந்த வெளியாவதை தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் காட்டுகின்றன.
தொழிற்சாலையில் மொத்தம் 103 தொழிலாளர்கள் வேலை செய்வதாக ஜகார்த்தா போலீஸ், குற்றவியல் தலைமை இயக்குநர் நிகோ அஃபின்டா இந்தோனீசியாவின் கொம்பாஸ் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 16 வருடங்களாகின்றன. 2996 பேர பலி
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி…
தீவிரவாதத்தின் கோர விளைவுகளை உலகம் அறிந்துகொண்ட நாள்…
2001ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 8.45 மணி….
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் மைய பகுதியில் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தில் உள்ள உலக வர்த்தக மையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
யாரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 வகை விமானம் ஒன்று 20,000 கலன் அளவுள்ள எரிபொருளுடன்,வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் மீது மோதியது.
இதன் விளைவாக உடனடியாக நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர்.
பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
எதிர்பாராத விபத்து என்று எண்ணி, இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, முதல் தாக்குதல் இடம்பெற்று சரியாக 18 நிமிடங்கள் கழித்து மற்றொரு போயிங் 767 வகை விமானம் தெற்கு கோபுரத்தின் மீது மோதியது.
இதன் விளைவாக பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் மொத்த அமெரிக்காவையே அதிர வைத்தது.
அலகொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க, அமெரிக்காவில் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள் அவற்றில் இரண்டு விமானங்களை நியூயோர்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது மோதச் செய்தனர்.
இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள தீவுக்கூட்டத்தை இர்மா சூறாவளியின் மையம் தாக்கியுள்ளது.
வானியல் ஆய்வாளர்கள் அதை நான்காம் வகை புயல் என்று வகைப்படுத்தியுள்ளனர். புயல்களிலேயே இராண்டாவது அதிக சக்தி வாய்ந்ததாக இவ்வகைப் புயல்கள் கருதப்படுகின்றன.
ஃபுளோரிடாவின் கல்ஃப் கோஸ்ட் கடற்கரைப் பகுதியை நோக்கி வட மேற்குத் திசையில் நகரும் முன்பு, ஃபுளோரிடா கீஸ் என்று அழைக்கப்படும் தீவுக்கூட்டத்தின் தாழ்வான பகுதிகளை அது மணிக்கு 209 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சூறாவளியில் சிக்கிக்கொண்டால், அது உயிராபத்தை விளைவிக்கக்கூடும் என்னும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அம்மாகாணத்தில் இருந்து 63 லட்சத்துக்கும் மேலானவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கூறியிருந்தனர்.லோயர் ஃபுளோரிடா கீஸ் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் இந்த சூறாவளி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில் அந்தத் தீவுகளில் வசிப்பது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
Storm surge map
ஃபுளோரிடா கீஸ் தீவுகளைத் தாக்கியபின், அந்த சூறாவளியின் மையம் வடக்கு நோக்கி ஃபுளோரிடா மாகாணத்தின் பிரதான நிலப்பரப்பை அடையும்போது ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் விநியோகம் தடைபடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அங்கு சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இர்மா சூறாவளிக்கு முன்னும் பின்னும் செயின்ட் மார்ட்டின் தீவு
இத்தகைய பெரிய சூறாவளி மிகவும் அச்சத்தைத் தந்ததாகவும், இதற்காக ஒரு வார காலம் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் என்.பி.சி தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
கியூபா, செயின்ட் மார்ட்டின் தீவுகள், டர்க்ஸ் மற்றும் காகோஸ் தீவுகள், பார்புடா தீவு, போர்டோ ரிகோ, பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், அமெரிக்க வர்ஜின் தீவுகள், ஹைத்தி மற்றும் டோமினிக்க குடியரசு ஆகிய பகுதிகளும் இந்த சூறாவளியால் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளன.

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் தெற்கு கடலோர பகுதியில் கடந்த வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் சுமார் 8.1 ஆக ரிக்டர் அளவுக்கோலில் பதிவாகியுள்ளது.
மெக்சிகோவின் விமான நிலைய ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதோடு தலைநகரையொட்டிய பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் மெக்சிகோவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
இது வரை நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த இடங்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பல கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவை கடக்கிறது; அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை நெருங்குகிறது.
கடந்த சில மணி நேரத்தில் மேலும் வலிமை கூடியுள்ள இர்மா அதிகபட்சமாக மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.
கியூபாவின் வட கிழக்குக் கரையை ஒட்டியுள்ள கேமாகுவே தீவுக்கூட்டத்தில் தற்போது கரை கடக்கிறது இச்சூறாவளி.
ஃப்ளோரிடாவில் அனைவரும் வேளியேறத் தயாராக வேண்டும்
அமெரிக்காவை நெருங்கிவரும் இர்மா, ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாகாணத்தில் உள்ள 5.6 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் தங்கள் இடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அதே நேரம், ஃப்ளோரிடாவில் உள்ள அனைவருமே வெளியேறவேண்டிய தேவை வரலாம் என்றும், அதற்குத் தயாராக இருக்கும்படியும் அம்மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் எண் சூறாவளி
புவியின் மேற்குப் பகுதியில் வீசும் வெப்பமண்டல புயல்களை சூறாவளி (ஆங்கிலத்தில் ஹரிக்கேன்) என்று அழைப்பது வழக்கம்.
இத்தகைய சூறாவளிகளை அவற்றின் வேகத்தை ஒட்டி ஒன்று முதல் ஐந்து வரையிலான எண்களைக் கொண்டு வகைபிரிக்கிறார்கள்.
அவற்றில் அதிகபட்ச வேகம் உடைய சூறாவளிகளுக்கு ஐந்தாம் எண் தரப்படுகிறது.
தற்போது கரீபியன் தீவுகளை சூறையாடிவிட்டு, கியூபாவுக்கு நகர்ந்துள்ள இர்மா ஓர் ஐந்தாம் எண் சூறாவளி.
இந்தச் சூறாவளியால் கரீபியன் தீவுகளில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர்.
பல பத்தாண்டுகளில் கியூபாவை ஐந்தாம் எண் சூறாவளி தாக்குவது இதுவே முதல் முறை.
கிரீன்விச் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு இர்மாவின் அதிகபட்ச வேகம் 257 கி.மீ.யாக இருந்தது என அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
கியூபாவின் கேமாகுவே, சீகோ டி அவிலா, சேங்டி ஸ்பிரிடஸ், வில்லா கிளாரா, மேடன்சாஸ் ஆகிய மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்
"சில இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, சில தொலைதூர நகரங்களில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுகிறது" என்கிறார் கியூபத் தலைநகர் ஹவானாவில் உள்ள பிபிசி செய்தியாளர் வில் கிராண்ட்.
தங்களை கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு இந்தச் சூறாவளி ஃப்ளோரிடா நீரிணை வழியாக மியாமிக்குச் சென்றுவிடும் என்று கியூபாவில் மக்கள் நினைக்கிறார்கள். அப்படியே நடந்தாலும், மக்கள் நெருக்கம் நிறைந்த இடங்களில் அதிவேக காற்றும், திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார்.

சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்துவந்த டால்ஃபின்கள்கூட பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.படத்தின் காப்புரிமைEPA
Image captionசுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்துவந்த டால்ஃபின்கள்கூட பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

முன்னதாக தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளைப் பாதுகாக்கவும், தங்கள் உடமைகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும் முயன்றனர்.
ஏறத்தாழ 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கியூபாவில் இருந்து வெளியேறியுள்ளனர். வடக்குக் கரையோர சுற்றுலா விடுதிகள் தற்போது காலியாக இருக்கின்றன.
தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையோ, அருகில் உள்ள பிற மாகாணங்களையோ ஃபுளோரிடா நாசம் செய்யும் என்று அமெரிக்க அவசரகால முகமையின் தலைவர் பிராக் லாங் எச்சரித்துள்ளார்.
ஃப்ளோரிடாவிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாள்களுக்கு மின்சாரம் இல்லாமல் போகும்; அமெரிக்க ஐக்கியத்தின் தென்கிழக்குப் பகுதி மொத்தமும் விழிப்புடன் இருப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.
"நமக்குள்ள நேரம் குறைந்துகொண்டே போகிறது. வெளியேற வேண்டிய பகுதியில் இருந்தால் நீங்கள் இப்போதே வெளியேறவேண்டும். உங்கள் வீடுகளைத் திரும்பிக் கட்டித் தர முடியும். ஆனால், உங்கள் வாழ்க்கையை மீளக் கட்டித் தர முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
பார்புடாவில் 95 சதவீத கட்டடங்கள் சேதம்
ஏற்கெனவே கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்புடாவில் உள்ள 95 சதவீத கட்டடங்களும் இந்தச் சூறாவளியால் சேதமடைந்துவிட்டன. அந்தத் தீவில் குடியிருப்பதே சாத்தியமில்லாமல் போய்விட்டது.
தீவை மறு கட்டமைப்பு செய்ய 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு பிடிக்கும் என ஆன்டிகுவா-பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரௌனி கூறியுள்ளார்.

மெக்சிகோ நாட்டில், கௌத்தமாலா எல்லையில் இன்று 8.0 அளவில் புவியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. மக்கள் வெளியேறுகின்னர்.

"ஹார்வி" என்ற சூறாவளியால் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அந்நகரில் இரவு முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியால் ஹியூஸ்டன் நகரில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. நகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், வீடுகளும் சேதமடைந்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான இங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் திருடு போவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என்று நகர மேயர் சில்விஸ்டர் டர்னர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஹார்வி புயல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
காலவரையற்ற இந்த உத்தரவு, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 முதல் காலை முதல் 10 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிவாரண பணிகளுக்கு உதவுபவர்கள், முதலுதவி அளிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்கள் மற்றும் பணி முடிந்து வீட்டுக்கு வருவோர் ஆகியோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெளியேறிய வீடுகளில் இருந்து பொருட்கள் திருடு போவதைத் தடுக்க இந்த தடை உதவும் என்றும், குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க இதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் டர்னர் தெரிவித்துள்ளார்.
ஹார்வி புயல்படத்தின் காப்புரிமைAFP
வீடுகளில் கொள்ளையடிப்பது, ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபடுவது, போலீஸ் அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்வது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக ஹூஸ்டன் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடத்தில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 13,000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஹார்வி புயல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
டெக்ஸாஸில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சூறாவளியின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என எடுத்துக்காட்டாக இருக்கும் விதமாக, நிவாரண நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹூஸ்டன் நகருக்கும் டிரம்ப் செல்லவில்லை. தனது பயணத்தால் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் டிரம்ப் அங்கு செல்லவில்லை என அதிபரின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 13 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த பூகம்பம் 7'0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியின்  தென்மேற்கு பகுதியில்  இன்று அதிகாலை  சுனாமி ஏற்பட்டுள்ளது!
இதன்காரணமாக சுமார் 6 பேர் வரை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்குள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,ரஷ்யாவின் Bering தீவிலிருந்து சுமார் 200 கி.மீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7.கி.மீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவு கோலில் 7.7 அளவாக பதிவாகியுள்ளது.
இதே வேளை திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள Klyuchevskoy எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்குள் மூன்று முறை இதை விட சற்று குறைவான அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 0.5 மீற்றர் அளவிற்கு கடலில் உள்ள அலைகள் எழும்பும் என்பதால், அங்கு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் Emergencies ministry எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைதுவ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் மத்திய லண்டனில் உள்ள #Marble Arch என்ற அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளதுடன், பித்தானியாவின் நேரம் காலை 10.49 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
Edgware சாலையில் அமைந்துள்ள இந்த 6 அடுக்கு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, தீயை அணைப்பதற்காக வீரர்கள் 6 குழுக்களாக பிரிந்து கடுமையாக போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லாகூர்: (காணொளி)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவ்ப்பூர் நகரில் டேங்கர் லொரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 100 பேர் உடல் கருகி பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனின் Bethnal Green என்ற பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்த கட்டிடத்தில் இருந்து பாரிய புகை வெளியேறுகின்ற நிலையில், அந்த புகையை சுவாசிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
28 வயதான Rosie Amies என்ற பெண்ணே வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 72 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பத்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக கட்டிடத்தின் கூரை வரை பரவியுள்ளது.
எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.